வேலூர் கன் டோன்மென்ட்-அரக்கோணம் யூனிட் ரயில் சேவை இன்று ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே திருச்சி கோட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. 
அரக்கோணம் சந்திப்பு மற்றும் வேலூர் கன்டோன்மென்ட் இட் இடையே முக்கிய பராமரிப்பு பணிகள் நடந்து வருகிறது. இதன் காரணமாக வேலூர் கன்டோன்மென்ட் ரயில் நிலையத்தில் இருந்து காலை 10 மணியளவில் புறப்பட்டு செல்லும் அரக்கோணம் வரை செல்லும் ரயில் எண் 06736 யூனிட் ரயில் சேவையும், மதியம் 2.05 மணிக்கு மறு மார்க்கத்தில் புறப்பட்டு வேலூர் கன்டோன்மென்ட் வரும் ரயில் எண் 06735 யூனிட் ரயில் சேவையும் இன்று ஒரு நாள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே திருச்சி கோட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.