தமிழ்நாட்டில் பிளஸ் 2 அரசு பொது தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. அதன்படி, ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் உள்ள தனம் பச்சையப்பன் மெட்ரிக் மேல் நிலைப்பள்ளி உள்ளது.
இப்பள்ளியில் படிக்கும் மாணவி லக்ஷயாஸ்ரீ என்பவர் தமிழ் பாடத்தில் 100க்கு 100 மதிப்பெண் பெற்று, மாநில அளவில் முதலிடம் பெற்ற சாதனை படைத்துள்ளார். இவர் மொத்தம் 595 மதிப்பெண் பெற்றுள்ளார்.
இதை யொட்டி அவரை, பள்ளியின் தாளாளர் கிருஷ்ணன், பள்ளியின் முதல்வர் ஜோதிலிங்கம் மற்றும் ஆசிரியர்கள் வாழ்த்து தெரிவித்து பாராட்டினர்.