ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தை அடுத்த சித்தேரி கிராமத்தில் கோவில் திருவிழா நடைபெற்று வருகிறது.
இதனையொட்டி கூத்து நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது அங்கு மது போதையில் 6 பேர் கூத்து நிகழ்ச்சியை முதலில் இருந்து தொடங்க வேண்டும் என் கூறி தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது.
இதுகுறித்து அரக்கோணம் தாலுக்கா காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இது தொடர்பாக அரக்கோணத்தை சார்ந்த திலீப் (வயது 26), சூர்யா (25), பிரவீன்குமார் (23), விஷ்ணு தத்ரி (25), ரூபேஷ் (23) மற்றும் நேதாஜி (25) ஆகியோரை போலீசார் கைது செய்து நீதிமன்றத் காவலில் சிறையில் அடைத்தனர்.