2000 Rs note invalid after 30th September - RBI decision
இந்தியாவில் 2000 ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் இருந்து திரும்பப் பெற இந்திய ரிசர்வ் வங்கி முடிவு செய்து, செப்டம்பர் 30,2023 க்குள் அவற்றை மாற்றிக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளது.

வெள்ளிக்கிழமை RBI வெளியிடப்பட்ட அறிக்கையில் இந்திய ரிசர்வ் வங்கியின் Clean Note Policy படி, புழக்கத்தில் இருந்து 2000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெற முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் 2000 ரூபாய் நோட்டுகள் தொடர்ந்து செல்லுபடியாகும்.

2000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ள பொதுமக்களுக்கு போதுமான நேரத்தை வழங்க முடிவு செய்து அனைத்து வங்கிகளும் செப்டம்பர் 30, 2023 வரை 2000 ரூபாய் நோட்டுகளுக்கு டெபாசிட் அல்லது பணத்திற்கு இணையாக தொகையை மாற்றும் ரூபாய் நோட்டுகளை வழங்கும் வசதியை உறுதி செய்ய வேண்டும் என அனைத்து வங்கிகளுக்கும் உத்தரவிட்டு உள்ளது.

பிரதமர் மோடி தலைமையிலான அரசு அனைத்து பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என அறிவித்து பொருளாதாரத்தில் தேவையா நாணயத் புழக்கத்தை உருவாக்க RBI சட்டம், 1934 இன் பிரிவு 24(1) இன் கீழ் நவம்பர் 2016 இல் 2000 ரூபாய் நோட்டு அறிமுகப்படுத்தப்பட்டது.

2000 ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்தும் நோக்கம் நிறைவேறியது, மற்றும் சந்தையில் போதுமான பிற மதிப்பிலான ரூபாய் நோட்டுகள் புழக்கத்திற்கு வந்துள்ளது. அதனால், 2018-19ல் ₹2000 ரூபாய் நோட்டுகள் அச்சடிப்பது நிறுத்தப்பட்டது.