2,000 Milk pot procession at Sholingur 

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் கிழக்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் கட்சியின் பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்-அமைச்சருமான எடப்பாடி கே.பழனி சாமியின் 69-வது பிறந்த நாள் விழா மற்றும் பழனிசாமி மீண்டும் தமிழக முதல்-அமைச்சராக வேண்டி 2,000 பெண்கள் பால்குட ஊர்வலம் கிழக்கு ஒன்றிய செயலாளர் ஏ.எல்.விஜயன் தலைமையில் நடைபெற்றது. 

இதில் அரக்கோணம் சட்டமன்ற உறுப்பினரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணை கொறடாவுமான சு.ரவி, சோளிங்கர் முன்னாள் எம்.எல்.ஏ. ஜி.சம்பத் ஆகியோர் கலந்து கொண்டு லட்சுமி நரசிம்மர் கோவில் வளாகத்தில் இருந்து பால்குட ஊர்வலத்தை தொடங்கி வைத்தனர்.

அண்ணாசிலை, பஸ் நிலையம் வழியாக கருமாரியம்மன் கோவில் வரை ஊர்வலம் சென்று கருமாரியம்மனுக்கு பாலபிஷேகம் செய்து, சிறப்பு அலங்காரம் செய்து, மகா தீபாராதனை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து கிழக்கு ஒன்றிய செயலாளர் அலுவலகத்தில் 2,000 பெண்களுக்கு சேலை, 3,000 பேருக்கு அன்னதானம் வழங்கினார்கள்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர் ஏ.எல்.சாமி, நகராட்சி உறுப்பினர் ஏ.எல்.மணிகண்டன், சோளிங்கர் மேற்கு ஒன்றிய செயலாளர் பெல்.ச.கார்த்திகேயன், நகர செயலாளர் ராமு, நகர துணை செயலாளர் வாசு, நகர அவைத்தலைவர் ஞானமூர்த்தி, நகர பொருளாளர் மணிகண்டன், முன்னாள் நகர மன்ற தலைவர் வேதகிரி மற்றும் டபிள்யூ.ஜி.மோகன், மணி, சம்பத், கிருஷ்ணன், தேவன், குன்னத்தூர் மணி, உள்பட ஒன்றிய, நகர நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.