வேலூர் விருபாட்சிபுரம் ஆரணி சாலையில் எலக்ட்ரிக்கல் கடை வைத்திருப்பவர் தியாகராஜன்(37). இவர் கடந்த 1ம் தேதி இரவு வழக்கம்போல் கடையை பூட்டி விட்டு, மறுநாள் காலை கடையை திறந்து பார்த்த போது கல்லா பெட்டியில் வைத்திருந்த 1 லட்சத்து 69 ஆயிரம் பணம் திருட்டு போயிருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இதுதொடர்பாக தியாகராஜன் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த பாகாயம் போலீசார், சிசிடிவி கேமரா பதிவுகளை வைத்து உடனடியாக தேடுதல் வேட்டையில் இறங்கினர். 

அப்போது வேலூர் சுற்றுலா மாளிகை அருகே சாலையில் சந்தே கப்படும்படி. திரிந்து கொண்டிருந்த 15 வயது மதிக்கத் தக்க 2 சிறுவர்களை பிடித்து விசாரித்தனர்.

விசாரணையில் அந்த சிறுவர்கள் வேலூர் சத்துவாச்சாரியை சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்தது. அவர்களிடம் இருந்து திருடப்பட்ட 1 லட்சத்து 69 ஆயிரத்தை கைப்பற்றினர். 

அதோடு, கைதான 2 சிறுவர்களையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறுவர் பாதுகாப்பு இல்லத்துக்கு அனுப்பி வைத்தனர்.