நம் முன்னோர்கள் பேச்சு வாக்கில் பல விஷயங்களை சொல்லி விட்டு சென்றுள்ளனர் .அதன் அர்த்தம் தெரியாமல் நாம் பலவற்றை மறந்து உள்ளோம் .மேலும் அதன் அர்த்தம் தெரியாததல் சிலவற்றை கடைபிடிப்பதும் இல்லை. அவர்கள் சொல்லிவிட்டு சென்றதில் ஒன்று தான் இந்த கால் ஆட்டி கொண்டே இருந்தால் குடும்பத்திற்கு கேடு உண்டாகும் என்பது அதை பற்றி இந்த பதிவில் பார்போம் .

நாம் காலையில் சாப்பிட்டு விட்டு வேலைக்கு செல்லும் போது நல்ல சுறுசுறுப்பாக செல்வோம் ,மாலை வீடு திரும்பும்போது சோம்பலாக களைப்போடு வருவோம் காலையில் இருந்த சுறுசுறுப்பு எங்கே போய்விட்டது.நாம் வேலை செய்யும் போது நம் உடல் சக்தி செலவாகிறது அதனால் நாம் சக்தி இழந்து மாலை வரும்போது களைப்படைகிறோம் இந்த சக்தியை தான் பிராண சக்தி என்பார்கள் .

நாம் எந்த வேலை செய்தாலும் நாம் உடலில் உள்ள பிராண சக்தி செலவாகும். நடப்பது ஓடுவது பார்பது பேசுவது இது போல் எந்த வேலை செய்தாலும் நாம் உடலில் உள்ள பிராண சக்தி செலவாகும் .

எந்நேரமும் கால் ஆட்டி கொண்டே இருப்பதால் நாம் உடலில் சேமித்து வைத்து உள்ள சக்தி அனைத்தும் செலவாகிவிடும்.அதனால் நாம் அன்றாட வேலைகள் செய்யும் போது நாம் உடலுக்கு தேவையான சக்தி கிடைக்காது அதனால் நாம் விரைவில் களைப்படைவோம், இது தொடரும் போது சில காலம் கழித்து.நாம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி இல்லாமல் விரைவில் நோய்வாய்படுவோம்.

இது போல் தேவை இல்லாமல் தொடர்ந்து நோய்வாய்பட்டால், வேலைக்கும் செல்ல முடியாது மருத்துவ செலவும் அதிகம் ஏற்படும்.இதனால் குடும்பத்தில் உள்ளவர்களுக்கும் மனக்கஷ்டம் , பணக்கஷ்டம் ஏற்ப்படும். இந்த விளக்கத்தை ஒவ்வொருவரிடமும் சொல்லி விளக்கம் கொடுக்க முடியாது என்பதால் அதை சுருக்கி கால் ஆட்டி கொண்டு இருந்தால் குடும்பத்திற்கு கேடு உண்டாகும் , அல்லது கால் ஆட்டி கொண்டே இருந்தால் குடும்பத்தையே ஆட்டி வைக்கும் என்று சொல்லி விட்டு சென்றுள்ளனர் நம் முன்னோர்கள் .