குழந்தைகள் முதல் அனைவரும் விரும்பி சாம்பிடும் சாக்லேட், கோகோ பழ விதைகளிலிருந்து தயாரிக்கப்படுகிறது. இதனால் உடலுக்கு பல நன்மைகள் உள்ளதை போல சில பிரச்சனைகளும் ஏற்படும் அபாயம் உள்ளது.
குறிப்பாக காலையில் வெறும் வயிற்றில் சாக்லேட் சாப்பிட்டால் உடலில் உள்ள சர்க்கரை அளவை வெகுவாக அதிகரித்துவிடும். சாக்லேட்டில் பால், சர்க்கரை உள்ளிட்ட பொருட்களுடன் வாசனைக்காக சில வேதியல் பொருட்களும் சேர்க்கப்படுவதால் செரிமான கோளாறு உண்டாகும். 

வெறும் வயிற்றில் சாக்லேட் சாப்பிடுவதால் வயிற்று வலி, குமட்டல் உள்ளிட்டவையும் ஏற்படும். அதிகமாக சாக்லேட் சாப்பிட்டு வந்தால் கொழுப்பு சேர்வதுடன், இதய பிரச்சினை ஏற்படவும் வாய்ப்புள்ளது. 

எப்போதும் காலையில் வெறும் வயிற்றில் சிறிது தண்ணீர் குடித்துவிட்டு 15 நிமிடங்கள் கழித்து எதையும் சாப்பிடுவது நல்லது.