ராணிப்பேட்டை மாவட்டத்தில் பல்வேறு காவல் நிலையங்களில் பணிபுரிந்து வந்த 15 உதவி காவல் ஆய்வாளர்களை பணியிட மாற்றம் செய்து ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிரண் சுருதி இன்று உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி வாலாஜா காவல் நிலைய உதவி காவல் ஆய்வாளர் தீபன் சக்கரவர்த்தி தக்கோலம் காவல் நிலையத்திற்கும், ராணிப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய உதவி காவல் ஆய்வாளர் அருள்மொழி அவலூர் காவல் நிலையத்திற்கும், திமிரி காவல் நிலைய உதவி காவல் ஆய்வாளர் சிவாஜி நக்சலைட் சிறப்பு தடுப்பு பிரிவுக்கும் என ஒட்டுமொத்தமாக 15 உதவி காவல் ஆய்வாளர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.