Torrential rain with cyclonic winds caused a power outage for 5 hours in banavaram areas
பாணாவரம் பகுதிகளில் சூறாவளி காற்றுடன் கன மழை கொட்டித் தீரத்தது. மேலும், மின்கம்பி மீது மரம் முறிந்து விழுந்ததால் சுமார் 5 மணி நேரம் மின்தடை ஏற்பட்டது.
பாணாவரம் அடுத்த கூத்தம்பாக்கம், வெளிதாங்கிபுரம், மங்களம், புதூர், ஆயல், போளிப்பாக்கம், மேல்வீராணம், மகேந்திரவாடி, சூரை உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் நேற்று முன்தினம் இரவு இடி, மின்னல் மற்றும் சூறாவளி காற்றுடன் கனமழை கொட்டித்தீர்த்தது இதன் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது ஒருமணி நேரத்துக்கும் மேலாக நீடித்த சூறாவளி காற்றால் மின் விநியோகம் துண்டிக்கப்பட்டது.
இந்நிலையில், கூத்தம் பாக்கம் குடியிருப்பு பகுதியில் மின்கம்பி மீது மரம் முறிந்து விழுந்ததில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதுகுறித்து, பாணாவரம் மின்வாரிய அலுலகத்துக்கு தகவல் தெரிவித்ததும், கிராம இளைஞர்கள் ஒன்று கூடி மின்கம்பி மீது விழுந்த மரத்தை 2 மணி நேரம் போராடி அப்புறப்படுத்தினர். பின்னர், மின்வாரிய அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்ததின் பேரில் சுமார் 5 மணி நேரத்திற்கு பிறகு மின் விநியோகம் வழங்கப்பட்டது.