👉 1913ஆம் ஆண்டு ஏப்ரல் 13ஆம் தேதி செய்திகள் வாசிப்பது எம்.ஆர்.எம்.சுந்தரம் என்ற குரலுக்கு சொந்தக்காரரான மே.ரா.மீ.சுந்தரம் திருநெல்வேலி மாவட்டம் மேலநத்தம் கிராமத்தில் பிறந்தார்.
👉 1954ஆம் ஆண்டு ஏப்ரல் 13ஆம் தேதி காமராசர் சென்னை மாநிலத்தின் முதல்வரானார்.
👉 2006ஆம் ஆண்டு ஏப்ரல் 13ஆம் தேதி கூகுள் காலண்டர் வெளியிடப்பட்டது.
முக்கிய தினம் :-
ஜாலியன் வாலாபாக் படுகொலை தினம்
🌟 நாடு முழுவதும் பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக சுதேசி இயக்கம், சத்தியாக்கிரகம் போன்ற போராட்டங்கள் வலுப்பெற்றன. எனவே விடுதலை வேட்கையை அகற்றவும், மக்களின் கருத்துரிமையைப் பறிக்கவும் (1919) ரௌலட் சட்டத்தை ஆங்கிலேய அரசு கொண்டுவந்தது.
🌟 இதற்கு எதிர்ப்பு தெரிவித்து 1919ஆம் ஆண்டு ஏப்ரல் 13ஆம் தேதி அமிர்தசரஸ் நகரில் உள்ள ஜாலியன் வாலாபாக் திடலில் ஆயிரக்கணக்கான மக்கள் கூடினர். இக்கூட்டத்தைக் கண்டு ஆங்கிலேய அரசு ஜெனரல் டயர் தலைமையில் ஒரு படையை அங்கு அனுப்பியது.
🌟 எவ்வித முன்னறிவிப்பும் இன்றி கூட்டத்தை நோக்கிச் சுட உத்தரவிட்டார் ஜெனரல் டயர். பத்து நிமிடங்கள் நடந்த இந்த துப்பாக்கிச் சூட்டில் 1650 தடவைகள் சுடப்பட்டன. இச்சூட்டில் பெண்கள், குழந்தைகள் உட்பட ஆயிரக்கணக்கானோர் படுகொலை செய்யப்பட்டனர். விடுதலைப் போராட்ட வீரர்களின் நினைவாக இத்தினம் அனுசரிக்கப்படுகிறது.
பிறந்த நாள் :-
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
✍ பிரபல கவிஞர், சிந்தனையாளர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் 1930ஆம் ஆண்டு ஏப்ரல் 13ஆம் தேதி தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள செங்கப்படுத்தான்காடு (சங்கம்படைத் தான்காடு) என்ற கிராமத்தில் பிறந்தார்.
✍ இவர் சிறு வயதிலேயே கவிதை புனையும் ஆற்றல் பெற்றிருந்தார். கருத்தும், கற்பனையும் நிறைந்த இவரது பாடல்களை ஜனசக்தி பத்திரிக்கை வெளியிட்டு வந்தது.
✍ இவர் தனக்கு தமிழ் கற்பித்த குரு பாரதிதாசன் வாழ்க என்று எழுதிவிட்டுதான் கடிதம் எழுதத் தொடங்குவாராம். படித்த பெண் திரைப்படத்துக்காக 1955ஆம் ஆண்டு முதன்முதலாக பாடல் எழுதினார். இதன் மூலம் திரைப்படத் துறையில் தன் முத்திரையை பதித்தார்.
✍ சின்னப் பயலே சின்னப் பயலே, தூங்காதே தம்பி தூங்காதே ஆகிய குறிப்பிடத்தக்க காலத்தால் அழியாத பாடல்களை வழங்கிய பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் தனது 29வது வயதில் (1959) மறைந்தார்.
இன்றைய தின நிகழ்வுகள்
1111 – ஐந்தாம் என்றி புனித உரோமைப் பேரரசரானார்.
1204 – கான்ஸ்டண்டினோபில் நான்காம் சிலுவைப் போர் வீரர்களிடம் வீழ்ந்தது. பைசாந்தியப் பேரரசு தற்காலிகமாக சரிந்தது.
1605 – உருசியப் பேரரசர் பொரிஸ் கதூனோவ் இறந்தார் (பழைய நாட்காட்டி). இரண்டாம் பியோத்தர் பேரரசராக முடிசூடினார்.
1777 – அமெரிக்கப் புரட்சிப் போர்: அமெரிக்கப் படைகள் நியூ செர்சி, பவுண்ட் புரூக் சமரில் தாக்கப்பட்டு தோற்கடிக்கப்பட்டனர்.
1829 – பிரித்தானிய நாடாளுமன்றம் ரோமன் கத்தோலிக்கர்களுக்கு ஐக்கிய இராச்சியத்தில் வாக்களிக்கவும், நாடாளுமன்றத்தில் அமரவும் உரிமை அளித்தது.
1861 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: சம்டர் கோட்டை கூட்டமைப்புப் படைகளிடம் வீழ்ந்தது.
1865 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: வட கரொலைனா மாநிலத் தலைநகர் ராலீ அமெரிக்கப் படைகளிடம் வீழ்ந்தது.
1873 – ஐக்கிய அமெரிக்காவில் லூசியானாவில் கோல்ஃபாக்ஸ் என்ற இடத்தில் இடம்பெற்ற தேர்தல் வன்முறையில் 60 ஆபிரிக்க அமெரிக்கர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
1919 – ஜலியான்வாலா பாக் படுகொலை: அமிருதசரில் ஜலியான்வாலா பாக் திடலில் கூடியிருந்த மக்களை நோக்கி பிரித்தானியப் படையினர் சுட்டதில் 379 பேர் கொல்லப்பட்டனர். 1200 பேர் காயமடைந்தனர்.
1930 – மகாத்மா காந்தியின் உப்புச் சத்தியாக்கிரகத்திற்கு ஆதரவாக தென்னிந்தியாவில் ராஜாஜி தலைமையில் பாத யாத்திரை (வேதாரண்யம் உப்புச் சத்தியாகிரகம்) தொடங்கப்பட்டது.
1939 – இந்தியாவில் பிரித்தானியர்களுக்கு எதிரான இந்துஸ்தானி லால் சேனை (இந்திய செம்படை) என்ற இராணுவ அமைப்பு ஆரம்பிக்கப்பட்டது.
1941 – சப்பானுக்கும் சோவியத் ஒன்றியத்துக்கும் இடையில் அணிசேரா உடன்பாடு எட்டப்பட்டது.
1943 – இரண்டாம் உலகப் போர்: போலந்தில் கட்டின் என்ற இடத்தில் சோவியத் படைகளால் சுட்டுக் கொல்லப்பட்ட போலந்து போர்க் கைதிகளின் புதைகுழிகளைத் தாம் கண்டுபிடித்ததாக செருமனி அறிவித்தது.
1944 – நியூசிலாந்துக்கும் சோவியத் ஒன்றியத்துக்கும் இடையில் பண்ணுறவாண்மை ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.
1945 – இரண்டாம் உலகப் போர்: செருமனியில் கார்டெலகான் என்ற இடத்தில் ஆயிரத்திற்கும் அதிகமான போர், அரசியல் கைதிகள் நட்சிகளினால் படுகொலை செய்யப்பட்டனர்.
1945 – இரண்டாம் உலகப் போர்: சோவியத், பல்கேரியப் படையினர் வியென்னா நகரைக் கைப்பற்றினர்.
1948 – எருசலேமில், அதாசா மருத்துவமனையில் இடம்பெற்ற படுகொலைகளில் யூத மருத்துவர்கள், தாதிகள், மாணவர்கள் 78 பேர் கொல்லப்பட்டனர்.
1953 – இயன் பிளெமிங் தனது முதலாவது ஜேம்ஸ் பொண்ட் புதினத்தை வெளியிட்டார்.
1954 – காமராசர் சென்னை மாநிலத்தின் முதல்வரானார்.
1960 – ஐக்கிய அமெரிக்கா டிரான்சிட் 1-பி என்ற உலகின் முதலாவது செய்மதி இடஞ்சுட்டல் தொகுதியை விண்ணுக்கு ஏவியது.
1970 – நிலா நோக்கிச் சென்று கொண்டிருந்த அப்பல்லோ 13 விண்கலத்தில் ஆக்சிசன் தாங்கி வெடித்து பெரும் சேதம் ஏற்பட்டது.
1974 – ஐக்கிய அமெரிக்காவின் முதலாவது வணிக புவி நிலைத் துணைக்கோள் வெஸ்டார் 1 ஏவப்பட்டது.
1975 – லெபனானில் 27 பாலத்தீனர்கள் கொல்லப்பட்டதை அடுத்து அங்கு 15-ஆண்டுக்கால உள்நாட்டுப் போர் ஆரம்பமானது.
1976 – பின்லாந்தில் வெடிபொருள் தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட விபத்தில் 40 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
1979 – இலங்கையில் சுயாதீன தொலைக்காட்சி சேவை ஆரம்பிக்கப்பட்டது.
1987 – மக்காவு தீவை மக்கள் சீனக் குடியரசிடம் 1999 இல் ஒப்படைக்கும் ஒப்பந்தம் போர்த்துக்கலுக்கும் சீனாவுக்கும் இடையில் எட்டப்பட்டது.
2003 – கிரேக்கத்தில் ஏதென்சு நகரில் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளாகியதில் 21 பள்ளி மாணவர்கள் உயிரிழந்தனர்.
2012 – வட கொரியா ஏவிய ஊனா-3 என்ற ஏவூர்தி வானில் வெடித்துச் சிதறியது.
2017 – ஆப்கானித்தான், நங்கர்காரில் அமெரிக்கா மிகப்பெரும் வெடிகுண்டை வீசியது.
இன்றைய தின பிறப்புகள்
1570 – கை பாக்சு, வெடிமருந்து சதித்திட்டத்தைத் தீட்டிய ஆங்கிலேயப் போர்வீரர் (இ. 1606)
1743 – தாமஸ் ஜெஃவ்வர்சன், அமெரிக்காவின் 3வது அரசுத்தலைவர் (இ. 1826)
1817 – ஜார்ஜ் ஜேக்கப் ஹோலியோக், பிரித்தானிய மதசார்பின்மைக் கொள்கையாளர், ஊடகவியலாளர் (இ. 1906)
1901 – எஸ். ஏ. விக்கிரமசிங்க, இலங்கை இடதுசாரி அரசியல்வாதி (இ. 1981)
1905 – புருனோ ரோசி, இத்தாலிய அமெரிக்க இயற்பியலாளர் (இ. 1993)
1913 – மே. ரா. மீ. சுந்தரம், தமிழக எழுத்தாளர், கவிஞர் (இ. 1995)
1930 – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், தமிழகத் திரைப்படப் பாடலாசிரியர், கவிஞர் (இ. 1959)
1930 – எஸ். முத்தையா, இலங்கை-இந்திய ஊடகவியலாளர், வரலாற்றாளர் (இ. 2019)
1940 – ஜெ. எம். ஜி. லெ கிளேசியோ, நோபல் பரிசு பெற்ற பிரெஞ்சு-மொரீசிய எழுத்தாளர்
1949 – கிறித்தோபர் இட்சன்சு, ஆங்கிலேய-அமெரிக்க எழுத்தாளர், ஊடகவியலாளர் (இ. 2011)
1960 – ரவூப் ஹக்கீம், இலங்கை அரசியல்வாதி
1962 – நிருபமா ராஜபக்ச, இலங்கை அரசியல்வாதி
1963 – காரி காஸ்பரொவ், உருசிய சதுரங்க ஆட்ட வீரர்
இன்றைய தின இறப்புகள்
1918 – இலாவர் கோர்னிலோவ், உருசிய இராணுவத் தளபதி (பி. 1870)
1941 – ஆன்னி ஜம்ப் கெனான், அமெரிக்க வானியலாளர் (பி. 1863)
1973 – டட்லி சேனாநாயக்க, இலங்கையின் அரசியல்வாதி, பிரதமர் (பி. 1911)
1973 – பல்ராஜ் சாஹனீ, இந்திய திரைப்பட நடிகர் (பி. 1913)
1990 – எஸ். பாலச்சந்தர், தமிழக வீணைக் கலைஞர், திரைப்பட இயக்குனர், நடிகர், தயாரிப்பாளர் (பி. 1927)
2015 – எதுவார்தோ காலியானோ, உருகுவே ஊடகவியலாளர், எழுத்தாளர் (பி. 1940)
2015 – கூன்டர் கிராசு, நோபல் பரிசு பெற்ற செருமானிய எழுத்தாளர் (பி. 1927)
இன்றைய தின சிறப்பு நாள்
ஆசிரியர் நாள் (எக்குவடோர்)