ராணிப்பேட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
வேலூர், ராணிப்பேட்டை மாவட்டம் என்றாலே வெயிலுக்கு பெயர் போன மாவட்ட என பொதுமக்கள் சொல்லுவார்கள் மேலும் கோடை காலம் என்றால் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்பது நாம் அனைவரும் அறிந்த விஷயம் ஆகும். அதன்படி, இந்த ஆண்டு கோடைகால தொடக்கத்திலேயே வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இந்த நிலையில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று பிற்பகல் ஒரு சில இடங்களில் மழை பெய்தது. 

அதன்படி ராணிப்பேட்டை, வாலாஜா, ஆற்காடு, சிப்காட், அம்மூர் போன்ற இடங்களில் திடீரென பலத்த காற்று வீசி, பின்னர் இடி மின்னலுடன் மழை பொழிய தொடங்கியது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. சுமார் 1 மணி நேரம் பெய்த மழையால் வெப்பம் தனிந்து ராணிப்பேட்டையில் குளிர்ந்த காற்று விசியது.

இதனால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.