The word 'Arogara' is a shortened form of the phrase 'Ara Haro Hara'. Its meaning is “Oh God Almighty, Please remove our sufferings and grant us salvation”.
அரோகரா எனும் சொல்லின் முழுமை "அர கரோ கரா", அதாவது “இறைவா, எங்களின் துன்பங்களை நீக்கி, அருள் புரிவாயாக” என்று பொருள்படும்.

ஆரம்பத்தில், சிவனை வழிபட பயன்படுத்தப்பட்ட மறைமொழி தான் ’அர கரோ கரா’. இம்மறைமொழியை திருஞான சம்பந்தர் அவர்கள் எல்லா பக்தர்களையும் பயன்படுத்துமாறு அறிவுறுத்தினார். நாளடைவில், அம்மறைமொழி சுருங்கி "அரோகரா" என்று மருவியது. எனினும், இன்னமும் ”அரகரோகரா” என்று முழுமையாக கூறி வழிபடுபவரையும் நாம் காணலாம்.

ஒவ்வொரு முறையும் பக்தர்கள், “அரோகரா” என்று கூறும் போது, அவர்கள் இறைவனுக்கு ஓர் அன்பான கோரிக்கையை அனுப்புகிறார்கள். ”வெற்றி வேலைக் கையில் ஏந்தியிருக்கும் இறைவா, உன் வேலால் எங்கள் துன்பங்களை நீக்கி, எங்களுக்கு என்றுமே அருள் புரிவாயாக”.

பொதுவாக, எனக்கு அது வேண்டும், இது வேண்டும் என்று தன்னலமாக அல்லாமல் “அரோகரா” என்று சொல்வோம். இனம், மொழி, மதம் எல்லாம் கடந்து, எல்லாருக்காகவும் இறைவனை தொழுவோம். எல்லாருடைய துன்பங்களும் நீங்கி, எல்லாருக்கும் இறைவன் அருள் புரியட்டும். இனிமேல் தயங்காமல், சொல்லுங்கள் ”வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா!! வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா! ” இன்பமே சூழ்க, எல்லோரும் வாழ்க