ஆற்காடு அடுத்த விலாரி கிராமத்தில் ஏராளமான விவசாயிகள் இயற்கை விவசாயத்தில் பயிர் சாகுபடி செய்து வருகின்றனர்.
இயற்கை விவசாயிகளின் சார்பில் நம்மாழ்வார் பிறந்த நாளை கொண்டாடும் விதமாக மண் திருவிழா நடைபெற்றது. விழாவில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து இயற்கை விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர். விவசாயத்திற்கு ஆதாரமாக உள்ள மண்ணிற்கு மரியாதை செலுத்தும் வகையில் விவசாய நிலங்களில் தண்ணீர் நிரப்பி, சேற்றை எடுத்து தங்களது உடல் முழுவதும் பூசிக்கொண்டு இயற்கை குளியல் போட்டனர். நம்மாழ்வார் உருவப்படத்திற்கு இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட காய்கறிகளை கொண்டு மாலை அணிவித்தனர்.
இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட காய்கறிகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.