New Revenue Officer to take charge in Ranipet district
ராணிப்பேட்டை மாவட்ட வருவாய் அலுவலராக பணியாற்றி வந்த மீனாட்சி சுந்தரம் கோவை மாவட்டம், தொழிற்ச்சாலைத்துறை சிறப்பு டிஆர்ஓவாக பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
அதே போல், சென்னை பெருநகர மாநகராட்சி மண்டலம் 10 டிஆர்ஓ சுரேஷ் ராணிப்பேட்டை மாவட்ட வருவாய் அலுவலராக பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், ராணிப்பேட்டை மாவட்ட வருவாய் அலுவலராக சுரேஷ் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.