ஆற்காடு அடுத்த மேல்விஷாரம் சவுக்கார் நகரை சேர்ந்தவர் அப்துல்கயூம்(39). இவர் அதே பகுதியில் டிரைவிங் ஸ்கூல் நடத்தி வருகிறார். கடந்த சில மாதங்களாக இந்த ஸ்கூலை திறக்காமல் இருந்துள்ளார்.

கடந்த மாதம் 13ம் தேதி அப்துல்கயூம் மீண்டும் டிரைவிங் ஸ்கூலை திறந்துள்ளார். அப்போது, உள்ளே இருந்த அலுமினிய பொருட்கள், கார் பேட்டரிகள், வயர்கள், பழுது பார்க்கும் கருவிகள், இரும்பு கம்பிகள் உள்ளிட்ட ₹50 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் திருடு போனது தெரியவந்தது. இதுகுறித்து அப்துல்கயூம் ஆற்காடு டவுன் போலீசில் நேற்று புகார் செய்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்தனர்.

இதில், மேல்விஷாரம் சாதிக்பாஷா நகரை சேர்ந்த அன்சாரி(21) என்பவர் டிரைவிங்ஸ்கூலில் திருடியது தெரிய வந்தது. இதையடுத்து, அவரை கைது செய்த போலீசார் வழக்குப்பதிந்து ஆற்காடு கோர்ட்டில் ஆஜர்படுத்தி வேலூர் சிறையில் அடைத்தனர்.