உங்களுடைய ராசி என்ன? என்று கேட்டால் `பளிச்' சென்று பதில் சொல்லும் ஒருவரிடம் அவரது லக்னம் என்ன? என்று கேளுங்கள். சற்றுத் திணறுவார். ஜோதிடத்தில் ஆர்வம் உள்ளவர்களே சமயத்தில் லக்னத்தின் முக்கியத்துவத்தை உணருவதில்லை.

ஒரு தனி மனிதனின் ஜாதகப் பலன்களை துல்லியமாக அறிய ராசி மன்றும் நட்சத்திரத்தை விட லக்னமே அதிக பங்கு வகிக்கிறது.

என்ஜான் உடம்பிற்கு சிரசே பிரதானம் என்பர் முன்னோர்.
அதுபொல் ஜாதகம் என்கிற உடலுக்கு லக்னமே சிரசாகும்.

லக்னத்தை வைத்து ஒரு ஜாதகத்தை கணிக்கும் போது பலன்களை துல்லியமாக தர முடியும். ராசியை வைத்து கணித்தால் பொதுவான பலன்களை மட்டுமே கூற முடியும்.
லக்னம் 100% ராசி 30% முதல் 40%

ஒரு ஜாதகத்தை துல்லியமாக கணிக்க ராசி நவாம்ச கட்டங்கள் மட்டும் போதாது. நட்சத்திர பாதசாரம் நிச்சயமாக தேவைப்படுகிறது. மேலும் பஞ்ச அங்கங்கள் என அழைக்கப் படுகிற நாள் , நட்சத்திரம், திதி , யோகம் , கரணம் இவைகளும் அடுத்தடுத்த முக்கியத்துவத்தை பெறுகிறது.

லக்ன புள்ளி எந்த நட்சத்திரத்தில் உள்ளது என்பதை அறிந்து பின்னர் பலன் எடுத்தால் மட்டுமே பலன் சரியாக வரும்.

ஒரு ஜாதகம் ஆண் ஜாதகமா அல்லது பெண் ஜாதகமா என ஜாதகத்தை வைத்து கூற முடியும்.லக்ன புள்ளி நட்சத்திரத்தின் 1 அல்லது 3 ம் பாதத்தில் நின்றால் மட்டுமே அது ஆண் ஜாதகம். மாறாக 2 ,4 ம் பாதத்தில் நின்றால் அது பெண் ஜாதகமாகும். 

லக்ன புள்ளியை சரியாக கணித்து பிறகு பலன் கணித்தால் மிக சரியாக இருக்கும். மேலும் ஜாதகரின் வாழ்விற்கு எது நல்லது எது கெட்டது என ஜோதிடரால் கூற முடியும். மேலும் சரியான வழியை காட்ட முடியும்.