ராணிப்பேட்டை மாவட்ட சைபர்கிரைம் ஏடிஎஸ்பியாக குமார் நேற்று பொறுப்பேற்று கொண்டார்.
ராணிப்பேட்டை மாவட்ட சைபர் கிரைம் அலுவலகம், ராணிப்பேட்டை நகராட்சி அலுவலக கட்டிட வளாகத்தில் இயங்கி வருகிறது. இந்நிலையில், ராணிப்பேட்டை மாவட்ட சைபர் கிரைம் ஏடிஎஸ்பியாக குமார் நேற்று பொறுப்பேற்று கொண்டார்.
இவர், இதற்கு முன்பு போளூரில் டிஎஸ்பியாக பணியாற்றி வந்தார். இவர் பதவி உயர்வு பெற்று ராணிப்பேட்டை மாவட்ட சைபர் கிரைம் ஏடிஎஸ்பியாக பொறுப் பேற்றார்.
இவருக்கு காவல் துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் வாழ்த்து தெரிவித்தனர்.