ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அடுத்த திமிரி அருகே உள்ள நாராயண புரத்தைச் சேர்ந்தவர் 17 வயது மாணவி. இவர் ஆற்காடு பள்ளியில் பிளஸ் 2 படித்துவிட்டு கடந்த சில நாட்களுக்கு முன்பு தேர்வு எழுதி முடித்துள்ளார். நேற்று முன்தினம் மாலை தோழிகளை பார்த்துவிட்டு வருவதாக கூறிவிட்டு வெளியே சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை.

இதனால் அதிர்ச்சியடைந்த அவரது தாய் உறவினர்கள்,நண்பர்கள் வீடுகள் உட்பட பல இடங்களில் தேடியும் மாணவி கிடைக்கவில்லை. அவரை யாராவது கடத்திச் சென்றார்களா என்று தெரிய வில்லை. எனவே, அந்த மாணவியின் தாய் திமிரி போலீசில் நேற்று புகார் செய்தார். 

அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன பள்ளி மாணவியை தேடி வருகின்றனர்.