குறள் : 1098
அசையியற்கு உண்டாண்டோ ர் ஏஎர்யான் நோக்கப்
பசையினள் பைய நகும்.
மு.வ உரை :
யான் நோக்கும் போது அதற்காக அன்பு கொண்டவனாய் மெல்லச் சிரிப்பாள் அசையும் மெல்லிய இயல்பை உடைய அவளுக்கு அப்போது ஓர் அழகு உள்ளது.
கலைஞர் உரை :
நான் பார்க்கும் போது என் மீது பரிவு கொண்டவளாக மெல்லச் சிரிப்பாள்; அப்போது, துவளுகின்ற அந்தத் துடியிடையாள் ஒரு புதிய பொலிவுடன் தோன்றுகிறாள்
சாலமன் பாப்பையா உரை :
யாரோ எவரோ போல அவள் பேசிய பின்பும் நான் அவளைப் பார்க்க, அவள் மனம் நெகிழ்ந்து மனத்திற்குள் மெல்ல சிரித்தாள்; அச்சிரிப்பிலும் அவளுக்கு ஏதோ ஒரு குறிப்பு இருப்பது தெரிகிறது.
Kural 1098
Asaiyiyarku Untaantor Eeryaan Nokkap
Pasaiyinal Paiya Nakum
Explanation :
When I look the pitying maid looks in return and smiles gently; and that is a comforting sign for me.
Horoscope Today: Astrological prediction for May 01, 2023
இன்றைய ராசிப்பலன் - 01.05.2023 | Indraya Nalla Neram | Indraya Panchangam
இன்றைய பஞ்சாங்கம் | Indraya Panchangam
01-05-2023, சித்திரை 18, திங்கட்கிழமை, ஏகாதசி திதி இரவு 10.10 வரை பின்பு வளர்பிறை துவாதசி. பூரம் நட்சத்திரம் மாலை 05.51 வரை பின்பு உத்திரம். நாள் முழுவதும் சித்தயோகம். ஏகாதசி விரதம். பெருமாள் வழிபாடு நல்லது.
இராகு காலம் | Indraya Raagu Kalam
காலை 07.30 -09.00, எம கண்டம்- 10.30 - 12.00, குளிகன்- மதியம் 01.30-03.00, சுப ஹோரைகள்- மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00, இரவு 10.00-11.00.
இன்றைய ராசிப்பலன் - 01.05.2023 | Today rasi palan - 01.05.2023
மேஷம்
இன்று நீங்கள் செய்ய நினைத்த செயல்கள் பாதியில் தடைப்படலாம். வீண் பிரச்சினைகள் தேடி வரும். எதிலும் கவனத்துடன் இருப்பது நல்லது. உறவினர்கள் வழியாக நல்ல செய்திகள் வந்து சேரும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். வராத பழைய கடன்கள் வசூலாகும்.
ரிஷபம்
இன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் சில தடைகள் உண்டாகும். நண்பர்களுடன் மனக்கசப்பு ஏற்படும். உடன் பிறந்தவர்களிடம் ஒற்றுமை குறையும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் கூட்டாளிகளை அனுசரித்து சென்றால் எதிர்பார்த்த லாபத்தை அடையலாம்.
மிதுனம்
இன்று உங்கள் திறமைகேற்ப வாய்ப்புகள் கிடைக்கப் பெற்று வளர்ச்சி அடைவீர்கள். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். உடன்பிறந்தவர்கள் உதவிக்கரம் நீட்டுவர். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில் இதுவரை இருந்த பிரச்சினைகள் தீரும். சேமிப்பு உயரும்.
கடகம்
இன்று நீங்கள் எதிலும் ஆர்வமின்றி செயல்படுவீர்கள். வியாபாரத்தில் எதிர்பாராத செலவுகள் தோன்றும். வீட்டில் ஒற்றுமை குறையும். எதையும் செய்வதற்கு முன் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது. பொருளாதாராம் சுமாராக இருக்கும். நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள்.
சிம்மம்
இன்று நீங்கள் எந்த காரியத்தையும் உற்சாகத்தோடு செய்து முடிப்பீர்கள். உத்தியோக ரீதியாக சிலருக்கு வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். தொழில் வளர்ச்சிக்காக மேற்கொள்ளும் முயற்சிகள் நற்பலனை தரும். திருமண தடைகள் விலகும். தெய்வ வழிபாடு நிம்மதியை தரும்.
கன்னி
இன்று உறவினர்களால் மனசங்கடங்கள் ஏற்படும். குடும்பத்தில் அமைதி குறையும் சூழ்நிலை உருவாகும். தொழிலில் எதிர்பாராத செலவுகள் தோன்றினாலும் பெரிய பாதிப்பு இருக்காது. உத்தியோகத்தில் உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பால் பணிச்சுமை ஓரளவு குறையும்.
துலாம்
இன்று உங்கள் பணிகளை திறம்பட செய்து முடிப்பீர்கள். பெற்றோருடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். நண்பர்களின் உதவி மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கும். புதிய முயற்சிகளில் அனுகூலப் பலன் உண்டாகும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்ற நிலை ஏற்படும். வருமானம் பெருகும்.
விருச்சிகம்
இன்று குடும்பத்தில் திடீர் பணவரவு உண்டாகும். பிள்ளைகளின் படிப்பில் முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் எதிர்பாராத இனிய நிகழ்வுகள் நடைபெறும். வியாபாரத்தில் பணிபுரிபவர்கள் பொறுப்புடன் செயல்படுவார்கள். கடன் பிரச்சினைகள் குறையும். பழைய பாக்கிகள் வசூலாகும்.
தனுசு
இன்று உங்களுக்கு பணவரவு தாரளமாக இருந்தாலும் அதற்கேற்ப செலவுகளும் உண்டாகும். எளிதில் முடிய கூடிய காரியங்கள் கூட கால தாமதமாகும். தொழில் சம்பந்தமான புதிய திட்டங்கள் நிறைவேற தடைகள் ஏற்படலாம். குடும்பத்தில் சிக்கனமாக செயல்பட்டால் கடன்கள் ஓரளவு குறையும்.
மகரம்
இன்று நீங்கள் மனக்குழப்பத்துடனும், கவலையுடனும் காணப்படுவீர்கள். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் தாமதப்பலன் உண்டாகும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளுடன் நிதானமாக நடந்து கொள்வதன் மூலம் தேவையற்ற பிரச்சினைகளை தவிர்க்க முடியும்.
கும்பம்
இன்று உங்களுக்கு வியாபாரம் சிறப்பாக நடைபெறும். பணவரவு தாராளமாக இருக்கும். புதிய மனிதர்களின் நட்பு மகிழ்ச்சியை அளிக்கும். பிள்ளைகளோடு இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் மதிப்பும் மரியாதையும் கிட்டும். புதிய வாய்ப்புகள் தேடி வரும்.
மீனம்
இன்று குடும்பத்தில் ஒற்றுமையும் அமைதியும் நிலவும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த பாதிப்புகள் விலகி சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். சுபகாரிய முயற்சிகளில் வெற்றி கிட்டும். சிலருக்கு புதிய வாகனங்கள் வாங்கும் யோகம் உண்டாகும். வியாபார ரீதியாக பொருளாதாரம் சிறப்பாக இருக்கும்.
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001. 9383763001