குறள் : 1096
உறாஅ தவர்போல் சொலினும் செறாஅர்சொல்
ஒல்லை உணரப் படும்.
மு.வ உரை :
புறத்தே அயலார் போல் அன்பில்லாத சொற்களைச் சொன்னாலும் அகத்தே பகையில்லாதவரின் சொல் என்பது விரைவில் அறியப்படும்.
கலைஞர் உரை :
காதலை மறைத்துக் கொண்டு, புறத்தில் அயலார் போலக் கடுமொழி கூறினாலும், அவள் அகத்தில் கோபமின்றி அன்பு கொண்டிருப்பது விரைவில் வெளிப்பட்டுவிடும்
சாலமன் பாப்பையா உரை :
(பேசினேன்) அவள் யாரே எவரோ என்று பதில் சொன்னாள்; சொன்னாலும், மனத்தில் பகை இல்லாத அவளது சொல்லின் பொருள் விரைவில் அறியப்படும்.
Kural 1096
Uraaa Thavarpol Solinum Seraaarsol
Ollai Unarap Patum
Explanation :
Though they may speak harshly as if they were strangers the words of the friendly are soon understood.
Horoscope Today: Astrological prediction for April 29, 2023
இன்றைய ராசிப்பலன் - 29.04.2023 | Indraya Nalla Neram | Indraya Panchangam
இன்றைய பஞ்சாங்கம் | Indraya Panchangam
29-04-2023, சித்திரை 16, சனிக்கிழமை, நவமி திதி மாலை 06.23 வரை பின்பு வளர்பிறை தசமி. ஆயில்யம் நட்சத்திரம் பகல் 12.47 வரை பின்பு மகம். மரணயோகம் பகல் 12.47 வரை பின்பு அமிர்தயோகம். புதிய முயற்சிகளையும் பயணங்களையும் தவிர்க்கவும்.
இராகு காலம் | Indraya Raagu Kalam
காலை 09.00-10.30, எம கண்டம் மதியம் 01.30-03.00, குளிகன் காலை 06.00-07.30, சுப ஹோரைகள் - காலை 07.00-08.00, பகல் 10.30-12.00, மாலை 05.00-07.00. இரவு 09.00-10.00.
இன்றைய ராசிப்பலன் - 29.04.2023 | Today rasi palan - 29.04.2023
மேஷம்
இன்று குடும்பத்தினருடன் சிறு சிறு மனசங்கடங்கள் ஏற்படும். வண்டி வாகனங்களால் வீண் விரயங்கள் உண்டாகும். ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை. அலுவலகத்தில் உடனிருப்பவர்களால் அனுகூலம் ஏற்படும். வியாபாரத்தில் தொழிலாளர்களின் ஒத்துழைப்பால் எதிர்பார்த்த லாபம் கிட்டும்.
ரிஷபம்
இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான நிகழ்ச்சிகள் நடைபெறும். புதிய பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். உறவினர்கள் வழியாக சுபசெய்திகள் வந்து சேரும். வியாபார முன்னேற்றத்திற்காக எடுக்கும் முயற்சிகள் வெற்றியை தரும். இது வரை வராத கடன்கள் வசூலாகும். பொன்பொருள் சேரும்.
மிதுனம்
இன்று வியாபார ரீதியாக எடுக்கும் முயற்சிகளில் தடை தாமதங்கள் உண்டாகும். பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். ஆடம்பர பொருள் வாங்குவதில் கவனம் தேவை. உத்தியோகத்தில் உடன் பணிபுரிவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் தேவையற்ற பிரச்சினைகளை தவிர்க்கலாம்.
கடகம்
இன்று எந்த செயலையும் முழு ஈடுபாட்டுடன் செய்து முடிப்பீர்கள். உறவினர்கள் உங்களின் முயற்சிகளுக்கு உறுதுணையாக இருப்பார்கள். நண்பர்கள் உதவியாக இருப்பார்கள். வியாபாரம் சம்பந்தமான வெளியூர் பயணங்களால் நற்பலன்கள் கிடைக்கும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும்.
சிம்மம்
இன்று நீங்கள் செய்யும் செயல்களில் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். வீட்டில் பெரியவர்களின் அன்பும் ஆதரவும் கிட்டும். பூர்வீக சொத்துகள் வழியில் எதிர்பார்த்த லாபம் அடைவீர்கள். புதிய தொழில் தொடங்குவதற்கான திட்டங்கள் நிறைவேறும். சேமிக்கும் அளவிற்கு வருமானம் பெருகும்.
கன்னி
இன்று உங்களுக்கு பணபுழக்கம் சற்று குறைந்து காணப்படும்-. தேவைகள் நிறைவேற மற்றவர்களை அனுசரித்து செல்ல வேண்டியிருக்கும். உற்றார் உறவினர்கள் உதவியாக இருப்பார்கள். தொழில் வியாபாரத்தில் பிற மொழி நபர்களால் புதிய வாய்ப்பு கிடைக்கும். வேலையில் பணிச்சுமை குறையும்.
துலாம்
இன்று குடும்பத்தோடு வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு அமையும். வியாபாரத்தில் இருந்த போட்டி பொறாமைகள் விலகும். வருமானம் இரட்டிப்பாகும். வெளிவட்டார நட்பு கிடைக்கும். நண்பர்களின் உதவியால் கடன் பிரச்சினைகள் குறையும். சுபகாரிய பேச்சு வார்த்தைகள் நற்பலனை தரும்.
விருச்சிகம்
இன்று உங்களுக்கு தேவையில்லாத பிரச்சினைகள் ஏற்படலாம். உடன் பிறந்தவர்களுடன் ஒற்றுமை குறையும். குடும்பத்தில் பெண்களால் அனுகூலம் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் வேலையில் சற்று நிதானமாக செயல்படுவது நல்லது. வியாபார ரீதியான பயணங்களால் அனுகூலப்பலன் கிட்டும்.
தனுசு
இன்று உங்கள் ராசிக்கு பகல் 12.47 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் எந்த ஒரு செயலிலும் பிடிப்பு இல்லாமல் செயல்படுவீர்கள். எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் காலதாமதம் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துவது நல்லது. மதியத்திற்கு பின் மன அமைதி உண்டாகும்.
மகரம்
இன்று உங்கள் ராசிக்கு பகல் 12.47 மணிக்கு மேல் சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் கவனம் தேவை. வியாபார ரீதியான பிரச்சினைகளில் சற்று அமைதி காப்பது நல்லது. வெளி இடங்களில் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். வாகனங்களில் செல்லும் பொழுது எச்சரிக்கை வேண்டும்.
கும்பம்
இன்று வியாபாரத்தில் கூட்டாளிகளின் உதவியால் நல்ல லாபம் உண்டாகும். குடும்பத்தினருடன் இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். எந்த வேலையிலும் சுறுசுறுப்புடன் ஈடுபடுவீர்கள். உடன் பிறந்தவர்கள் உதவியாக இருப்பார்கள். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும்.
மீனம்
இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியற்ற சூழ்நிலை நிலவும். நண்பர்களுடன் சிறு மனக்கசப்பு ஏற்படலாம். உடலில் வலிகள் வந்து நீங்கும். சேமிப்பு குறையும். உறவினர்கள் கை கொடுத்து உதவுவார்கள். அயராத உழைப்பால் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். தெய்வ வழிபாடு நன்மையை கொடுக்கும்.