குறள் : 1094

யான்நோக்கும் காலை நிலன்நோக்கும் நோக்காக்கால்

தான்நோக்கி மெல்ல நகும்.


மு.வ உரை :

யான் நோக்கும் போது அவள் நிலத்தை நோக்குவாள் யான் நோக்காத போது அவள் என்னை நோக்கி மெல்லத் தனக்குள் மகிழ்வாள்.

கலைஞர் உரை :

நான் பார்க்கும்போது குனிந்து நிலத்தைப் பார்ப்பதும், நான் பார்க்காத போது என்னைப் பார்த்துத் தனக்குள் மகிழ்ந்து புன்னகை புரிவதும் என் மீது கொண்டுள்ள காதலை அறிவிக்கும் குறிப்பல்லவா?

சாலமன் பாப்பையா உரை :

நான் அவளை பார்க்கும்போது தலைகுனிந்து நிலத்தைப் பார்ப்பாள், நான் பார்க்காதபோதோ என்னைப் பார்த்து மெல்ல தனக்குள்ளே சிரிப்பாள்.


Kural 1094

Yaannokkum Kaalai Nilannokkum Nokkaakkaal

Thaannokki Mella Nakum

Explanation :

When I look she looks down; when I do not she looks and smiles gently.


Horoscope Today: Astrological prediction for April 27, 2023


இன்றைய ராசிப்பலன் - 27.04.2023 | Indraya Nalla Neram | Indraya Panchangam


இன்றைய பஞ்சாங்கம் | Indraya Panchangam

27-04-2023, சித்திரை 14, வியாழக்கிழமை, சப்தமி திதி பகல் 01.39 வரை பின்பு வளர்பிறை அஷ்டமி. புனர்பூசம் நட்சத்திரம் காலை 06.59 வரை பின்பு பூசம். அமிர்தயோகம் காலை 06.59 வரை பின்பு சித்தயோகம். சுபமுகூர்த்த நாள். சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.

இராகு காலம் | Indraya Raagu Kalam

மதியம் 01.30-03.00, எம கண்டம்- காலை 06.00-07.30, குளிகன் காலை 09.00-10.30, சுப ஹோரைகள் - காலை 09.00-11.00, மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00, இரவு 08.00-09.00.


இன்றைய ராசிப்பலன் - 27.04.2023 | Today rasi palan - 27.04.2023


மேஷம்


இன்று உறவினர்கள் வருகையால் மனநிம்மதி குறையலாம். கொடுத்த கடன் பெறுவதில் தாமதம் உண்டாகும். தொழில் முன்னேற்றத்திற்காக சிறு தொகையை செலவிட நேரிடும். உத்தியோகத்தில் உழைப்பிற்கேற்ற பலன் கிட்டும். எடுக்கும் முயற்சிகளுக்கு நண்பர்களின் மூலம் உதவிகள் கிடைக்கும்.


ரிஷபம்


இன்று பிள்ளைகள் வழியில் இல்லத்தில் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். நண்பர்களின் ஆலோசனைகள் வியாபாரத்தில் நற்பலன்களை தரும். உங்கள் மீதிருந்த பழிச்சொற்கள் நீங்கும். ஆன்மீக காரியங்கள் செய்வதற்கான வாய்ப்புகள் தேடி வரும். உத்தியோகத்தில் பணிச்சுமை குறையும்.


மிதுனம்


இன்று பிள்ளைகளால் வீண் விரயங்கள் ஏற்படும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளை அனுசரித்து செல்ல வேண்டி இருக்கும். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் பண பற்றாக்குறையை தவிர்க்கலாம். புதிய பொருட்களை வாங்கும் போது கவனமாக இருப்பது நல்லது. எதிர்பாராத உதவிகள் கிடைக்கும்.


கடகம்


இன்று குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் உண்டாகும். உறவினர்களால் உங்கள் பிரச்சினைகள் குறையும். எடுத்த காரியம் அனைத்திலும் வெற்றி கிட்டும். சிந்தித்து செயல்படுவதன் மூலம் வியாபாரத்தில் நல்ல லாபத்தை அடைவீர்கள். உத்தியோகத்தில் சக நண்பர்களின் ஆதரவு கிட்டும்.


சிம்மம்


இன்று பிள்ளைகள் வகையில் மகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும். ஆடம்பர பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். வேலையில் சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வெளியூரிலிருந்து வரவேண்டிய தொகை வந்து சேரும்.


கன்னி


இன்று குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பூர்வீக சொத்துகளால் நல்ல அனுகூலமான பலன்கள் கிடைக்கும். பெரிய மனிதர்களின் அறிமுகத்தால் நற்பலன்கள் கிட்டும். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் கைகூடுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழச்சியை தரும்.


துலாம்


இன்று நீங்கள் எந்த செயலையும் மனமகிழ்ச்சியுடன் செய்வீர்கள். பிள்ளைகள் பொறுப்புடன் இருப்பார்கள். உத்தியோகத்தில் வெளியூர் பயணங்களால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். வியாபாரத்தில் சிறு மாற்றங்கள் செய்வதன் மூலம் நல்ல லாபம் கிட்டும். தேவைகள் பூர்த்தியாகும்.


விருச்சிகம்


இன்று வேலையில் எதிர்பாராத பிரச்சினைகளை சந்திக்க வேண்டி வரும். குடும்பத்தில் வரவை காட்டிலும் செலவுகள் அதிகரிக்கும். மனைவி வழி உறவினர்களால் அனுகூலம் உண்டாகும். தொழிலில் இருந்த தேக்க நிலை பணிபுரிபவர்களின் ஒத்துழைப்பால் மாறும். சுபகாரியங்கள் கைகூடும்.


தனுசு


இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் நீங்கள் செய்யும் செயல்களில் சற்று கவனத்துடன் இருப்பது நல்லது. குடும்பத்தில் உள்ளவர்களுடன் சிறுசிறு மனசங்கடங்கள் ஏற்படலாம். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது உத்தமம். வியாபார ரீதியான கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை.


மகரம்


இன்று நீங்கள் எடுக்கும் காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உடன் பிறந்தவர்கள் வழியில் உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்களுடன் சுமூக உறவு உண்டாகும்.


கும்பம்


இன்று நீங்கள் செய்யும் செயல்களில் சுறுசுறுப்புடன் ஈடுபடுவீர்கள். இதுவரை இருந்த குழப்பங்கள் பிரச்சினைகள் எல்லாம் படிப்படியாக குறையும். உத்தியோக ரீதியான பயணங்களில் பெரிய மனிதர்களின் அறிமுகம் கிட்டும். சுப காரிய பேச்சுவார்த்தைகளில் சாதகமான பலன்கள் உண்டாகும்.


மீனம்


இன்று குடும்பத்தில் சுபசெலவுகள் செய்ய நேரிடும். உற்றார் உறவினர்களின் செயல்களால் மனநிம்மதி குறையும். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து செல்வது, எதிலும் நிதானத்துடன் செயல்படுவது நல்லது. தொழில் வியாபார ரீதியாக லாபம் அதிகரிக்கும், மறைமுக பகை நீங்கும்.

கணித்தவர்


ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001. 9383763001