குறள் : 1092

கண்களவு கொள்ளும் சிறுநோக்கம் காமத்தில்
செம்பாகம் அன்று பெரிது.

மு.வ உரை :

கண்ணால் என்னை நோக்கிக் களவு கொள்கின்ற சுருங்கிய பார்வை காமத்தில் நேர்பாதி அன்று அதைவிடப் பெரிய பகுதியாகும்.

கலைஞர் உரை :

கள்ளத்தனமான அந்தக் கடைக்கண் பார்வை, காம இன்பத்தின் பாதியளவைக் காட்டிலும் பெரிது!

சாலமன் பாப்பையா உரை :

நான் பார்க்காதபோது, என்னைக் களவாக பார்க்கும் இவளின் சிறு பார்வை, காதலில் சரி பாதி அன்று அதற்கு மேலாம்.

Kural 1092

Kankalavu Kollum Sirunokkam Kaamaththil
Sempaakam Andru Peridhu

Explanation :

A single stolen glance of her eyes is more than half the pleasure (of sexual embrace).



Horoscope Today: Astrological prediction for April 25 2023

இன்றைய ராசிப்பலன் - 25.04.2023 | Indraya Nalla Neram | Indraya Panchangam


இன்றைய பஞ்சாங்கம் | Indraya Panchangam

25-04-2023, சித்திரை 12, செவ்வாய்க்கிழமை, பஞ்சமி திதி காலை 09.40 வரை பின்பு வளர்பிறை சஷ்டி. திருவாதிரை நட்சத்திரம் பின்இரவு 04.20 வரை பின்பு புனர்பூசம். மரணயோகம் பின்இரவு 04.20 வரை பின்பு சித்தயோகம். ஸ்ரீ ராமானுஜர் ஜெயந்தி. புதிய முயற்சிகளை தவிர்க்கவும். 

இராகு காலம் | Indraya Raagu Kalam

மதியம் 03.00-04.30, எம கண்டம் காலை 09.00-10.30, குளிகன் மதியம் 12.00-1.30, சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00. 

இன்றைய ராசிப்பலன் - 25.04.2023 | Today rasi palan - 25.04.2023

மேஷம்

இன்று நீங்கள் ஆன்மீக தெய்வீக காரியங்களில் ஈடுபடுவதற்கான வாய்ப்புகள் அமையும். பிள்ளைகள் வழியில் சுப செய்திகள் வந்து சேரும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கும். ஒரு சிலருக்கு நவீன பொருட்கள் வாங்கும் யோகம் உண்டு. வியாபாரத்தில் அதிக லாபம் கிட்டும்.

ரிஷபம்

இன்று உங்களுக்கு உடலில் சிறுசிறு உபாதைகள் ஏற்படலாம். குடும்பத்தில் ஒற்றுமை சற்று குறைவாக காணப்படும். வியாபாரம் செய்வோர் கொடுக்கல் வாங்கலில் நிதானமாக செயல்படுவது நல்லது. பெரிய மனிதர்களின் நட்பு மனதிற்கு நம்பிக்கையை கொடுக்கும். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள்.

மிதுனம்

இன்று நீங்கள் தொட்ட காரியம் எல்லாம் வெற்றியில் முடியும். பிள்ளைகளால் அனுகூலம் உண்டாகும். தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டி பொறாமைகள் விலகும். வேலையில் பணிச்சுமை குறையும். குடும்பத்தில் செலவுகள் கட்டுக்குள் இருக்கும். ஆன்மீக பயணங்கள் செல்லும் வாய்ப்பு அமையும்.

கடகம்

இன்று குடும்பத்தில் உள்ளவர்களிடம் ஒற்றுமை குறைந்து காணப்படும். சுப செலவுகளால் கையிருப்பு குறையும். தொழில் புரிவோர் தொழிலில் சிறுசிறு மாறுதல்கள் செய்வதன் மூலம் லாபத்தை அடையலாம். ஆடம்பர செலவுகளை குறைத்தால் கடன் வாங்கும் சூழ்நிலையை தவிர்க்கலாம்.

சிம்மம்

இன்று குடும்பத்தில் மகிழ்ச்சி தரக்கூடிய நிகழ்ச்சிகள் நடைபெறும். சுபகாரிய முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் கிட்டும். உங்களின் பிரச்சினைகளுக்கு உறவினர்கள் பக்க பலமாக இருந்து உதவுவார்கள். உத்தியோகத்தில் சிலருக்கு புதிய பொறுப்புகள் கிடைப்பதற்கான சூழ்நிலை உருவாகும்.

கன்னி

இன்று நீங்கள் நினைத்த காரியத்தை நினைத்தபடியே செய்து முடிப்பீர்கள். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். திருமண சுபமுயற்சிகளில் அனுகூலப் பலன்கள் உண்டாகும். ஆடம்பர பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். வேலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

துலாம்

இன்று உங்களுக்கு புதிய நபரின் அறிமுகத்தால் வீண் பிரச்சினைகள் ஏற்படலாம். சொத்து சம்பந்தமான வழக்குகளில் இடையூறுகள் ஏற்படும். வேலையில் பணியாட்கள் பொறுப்புடன் செயல்படுவார்கள். தொழில் சம்பந்தமான வங்கி கடன்கள் கிடைக்கப் பெற்று மகிழ்ச்சி உண்டாகும். 

விருச்சிகம்

இன்று உங்கள் உடல் ஆரோக்கியத்தில் சிறு உபாதைகள் ஏற்படும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் செய்யும் செயல்களில் தடைகள் உண்டாகும். அலுவலகத்தில் மேலதிகாரிகளுடன் வீண் வாக்குவாதம் செய்யாமல் இருப்பது நல்லது. வெளியூர் பயணங்களில் அதிக கவனம் தேவை.

தனுசு

இன்று உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் நல்ல மாற்றம் உண்டாகும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கப்பதற்கான சூழ்நிலை அமையும். தொழிலில் எதிரிகளாக இருந்தவர்கள் கூட நண்பர்களாக மாறுவார்கள். பிள்ளைகளால் ஏற்பட்ட மனகஷ்டங்கள் குறையும். பொருளாதாரம் சிறப்பாக இருக்கும்.

மகரம்

இன்று நீங்கள் சுறுசுறுப்புடன் காணப்படுவீர்கள். எந்த ஒரு கடினமான காரியத்தை கூட எளிதில் செய்து முடிக்கும் துணிவு உண்டாகும். குடும்பத்துடன் தூர பயணம் செல்லும் வாய்ப்பு அமையும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு குறையும். வியாபாரத்தில் லாபம் பெருகும். சேமிப்பு உயரும்.

கும்பம்

இன்று உங்களுக்கு வர வேண்டிய பணவரவில் தாமதம் உண்டாகும். சகோதர, சகோதரிகளுடன் ஒற்றுமை குறையும். புதிய கருவிகள் வாங்கும் முயற்சிகளில் யோசித்து முடிவெடுப்பது நல்லது. வியாபாரத்தில் கூட்டாளிகளால் அனுகூலம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

மீனம்

இன்று உறவினர்களிடம் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றலாம். வியாபார ரீதியாக பொருளாதார நெருக்கடிகள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துவது நல்லது. உத்தியோகத்தில் உடனிருப்பவர்களை அனுசரித்து சென்றால் பிரச்சினைகள் குறையும்.

கணித்தவர்


ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001. 9383763001