குறள் : 1090

உண்டார்கண் அல்லது அடுநறாக் காமம்போல்

கண்டார் மகிழ்செய்தல் இன்று.


மு.வ உரை :

கள் தன்னை உண்டவரிடத்தில் அல்லாமல் காமத்தைப் போல் தன்னைக் கண்டவரிடத்தில் மயக்கத்தை உண்டாக்குவதில்லையே.


கலைஞர் உரை :

மதுவை உண்டால்தான் மயக்கம் வரும்; ஆனால், கண்டாலே மயக்கம் தருவது காதல்தான்


சாலமன் பாப்பையா உரை :

காய்ச்சப்பட்ட கள், உண்டவர்க்கே மகிழ்ச்சி தரும்; காதலைப் போல், காண்பவருக்கும் அது மகிழ்ச்சி தருவது இல்லை.


Kural 1090

Untaarkan Alladhu Atunaraak Kaamampol

Kantaar Makizhseydhal Indru


Explanation :

Unlike boiled honey which yields delight only when it is drunk love gives pleasure even when looked at.



Horoscope Today: Astrological prediction for April 23, 2023


இன்றைய ராசிப்பலன் - 23.04.2023 | Indraya Nalla Neram | Indraya Panchangam


இன்றைய பஞ்சாங்கம் | Indraya Panchangam

23-04-2023, சித்திரை 10, ஞாயிற்றுக்கிழமை, திரிதியை திதி காலை 07.48 வரை பின்பு வளர்பிறை சதுர்த்தி. ரோகிணி நட்சத்திரம் இரவு 12.27 வரை பின்பு மிருகசீரிஷம். நாள் முழுவதும் சித்தயோகம். மாத சதுர்த்தி விரதம். அட்சய திருதியை (வாக்கியம்). சுபமுகூர்த்த நாள். சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள். வாஸ்து நாள் காலை 8.50 மணி முதல் 9.26 மணி வரை. 

இராகு காலம் | Indraya Raagu Kalam

மாலை 04.30 - 06.00, எம கண்டம் - பகல் 12.00 - 01.30, குளிகன் - பிற்பகல் 03.00 - 04.30, சுப ஹோரைகள் - காலை 7.00 - 9.00, பகல் 11.00 - 12.00 , மதியம் 02.00 - 04.00, மாலை 06.00 - 07.00, இரவு 09.00 - 11.00. 

இன்றைய ராசிப்பலன் - 23.04.2023 | Today rasi palan - 23.04.2023

மேஷம்

இன்று குடும்பத்தில் ஒற்றுமை குறைந்து காணப்படும். பிள்ளைகள் மூலம் வீண் செலவுகள் ஏற்படலாம். எடுக்கும் முயற்சிகளில் சில தடங்கலுக்குப் பின் முன்னேற்றம் ஏற்படும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் அனுகூலங்கள் உண்டா-கும். எந்த செயலிலும் நிதானம் தேவை.

ரிஷபம்

இன்று நீங்கள் நினைத்த காரியம் அனைத்தும் நினைத்தபடி நிறைவேறும். குடும்பத்தில் சுப செலவுகள் தோன்றும். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் செலவுகள் கட்டுக்குள் இருக்கும். பெரிய மனிதர்களால் அனுகூலம் உண்டாகும். வியாபார ரீதியாக இருந்த அலைச்சல் சற்று குறையும்.

மிதுனம்

இன்று உற்றார் உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி ஏற்பட்டாலும் வீண் செலவுகளும் அதிகரிக்கும். பிள்ளைகளின் ஆரோக்கியத்திற்காக சிறு தொகையை செலவிட நேரிடும். மனைவி வழி உறவினர்களால் உதவிகள் கிடைக்கும். வியாபார ரீதியான பிரச்சினைகள் சற்று குறையும்.

கடகம்

இன்று வீட்டில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் நிலவும். திருமண பேச்சுவார்த்தைகளில் இருந்த தடைகள் விலகி முன்னேற்றம் ஏற்படும். பிள்ளைகள் உங்கள் குணமறிந்து நடந்து கொள்வார்கள். குடும்பத்தோடு தெய்வ தரிசனத்திற்காக பயணங்கள் மேற்கொள்ளும் வாய்ப்பு அமையும். மன அமைதி இருக்கும்.

சிம்மம்

இன்று புதிய தொழில் தொடங்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். ஆன்மீக பயணம் செல்லும் வாய்ப்பு அமையும். வெளி வட்டார நட்பு கிட்டும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். வீட்டில் பெண்களால் மகிழ்ச்சி உண்டாகும். சுபகாரிய முயற்சியில் வெற்றி கிடைக்கும்.

கன்னி

இன்று குடும்பத்தில் உள்ளவர்களுடன் ஒற்றுமை குறைந்து காணப்படும். ஆடம்பர பொருட் சேர்க்கையால் கையிருப்பு குறையும். சிக்கனமாக செயல்பட்டால் பணப்பிரச்சினையை தவிர்க்கலாம். தொழிலில் எதிர்பார்த்த லாபத்தை பெற அனுபவமுள்ளவர்களின் ஆலோசனைகளை கேட்பது நல்லது.

துலாம்

இன்று எதிர்பாராத விண் செலவுகள் ஏற்படலாம். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் நீங்கள் செய்யும் செயல்களில் தடை தாமதங்கள் உண்டாகும். அறிமுகம் இல்லாதவர்களிடம் தேவையற்ற வாக்குவாதங்களை செய்யாமல் இருப்பது நல்லது. கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் கவனம் தேவை.

விருச்சிகம்

இன்று பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் செலவுகள் கட்டுகடங்கி காணப்படும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். உடன் பிறந்தவர்களின் ஆதரவு கிட்டும்.

தனுசு

இன்று உங்களுக்கு சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். ஆடை ஆபரணம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வியாபார முன்னேற்றத்திற்காக நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் அனுகூலமான பலன் கிடைக்கும்.

மகரம்

இன்று நீங்கள் பணப்பிரச்சினையில் இருந்து விடுபட சிக்கனமுடன் செயல்பட வேண்டும். வாகனங்களால் வீண் விரயங்கள் ஏற்படலாம். குடும்பத்தினரை அனுசரித்து செல்வது நல்லது. எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். எதிலும் சிந்தித்து செயல்பட்டால் நற்பலனை அடையலாம்.

கும்பம்

இன்று உங்களுக்கு பணவரவு தாராளமாக இருந்தாலும் அதற்கேற்றார் போல் செலவுகளும் அதிகரிக்கும். உறவினர்கள் வருகையால் இல்லத்தில் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். பழைய நண்பர்களை சந்திப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். சுபகாரிய முயற்சிகளில் சற்று நிதானம் தேவை.

மீனம்

இன்று உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பிள்ளைகள் வழியில் சுபசெலவுகள் வந்து சேரும். குடும்பத்தினருடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை ஏற்படும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். தர்ம காரியங்கள் செய்து மனமகிழ்ச்சி அடைவீர்கள்.

கணித்தவர்


ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001. 9383763001