குறள் : 1087

கடாஅக் களிற்றின்மேற் கட்படாம் மாதர்

படாஅ முலைமேல் துகில்.


மு.வ உரை :

மாதருடைய சாயாத கொங்கைகளின் மேல் அணிந்த ஆடை மதம் பிடித்த யானையின் மேல் இட்ட முகப்படாம் போன்றது.


கலைஞர் உரை :

மதங்கொண்ட யானையின் மத்தகத்தின் மேலிட்ட முகபடாம் கண்டேன்; அது மங்கையொருத்தியின் சாயாத கொங்கை மேல் அசைந்தாடும் ஆடைபோல் இருந்தது


சாலமன் பாப்பையா உரை :

அந்தப் பெண்ணின் சாயாத முலைமேல் இருக்கும் சேலை, கொல்லம் மதம் பிடித்த ஆண் யானையின் முகபடாம் போன்று இருக்கிறது.


Kural 1087

Kataaak Kalitrinmer Katpataam Maadhar

Pataaa Mulaimel Thukil


Explanation :

The cloth that covers the firm bosom of this maiden is (like) that which covers the eyes of a rutting elephant.



Horoscope Today: Astrological prediction for April 20, 2023


இன்றைய ராசிப்பலன் - 20.04.2023 | Indraya Nalla Neram | Indraya Panchangam


இன்றைய பஞ்சாங்கம் | Indraya Panchangam

20-04-2023, சித்திரை 07, வியாழக்கிழமை, அமாவாசை திதி காலை 09.42 வரை பின்பு வளர்பிறை பிரதமை. அஸ்வினி நட்சத்திரம் இரவு 11.10 வரை பின்பு பரணி. அமிர்தயோகம் இரவு 11.10 வரை பின்பு சித்தயோகம்.  

இராகு காலம் | Indraya Raagu Kalam

மதியம் 01.30-03.00, எம கண்டம்- காலை 06.00-07.30, குளிகன் காலை 09.00-10.30, சுப ஹோரைகள் - காலை 09.00-11.00, மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00, இரவு 08.00-09.00. 

இன்றைய ராசிப்பலன் - 20.04.2023 | Today rasi palan - 20.04.2023

மேஷம்

இன்று குடும்பத்தில் ஒற்றுமை நல்ல படியாக இருக்கும். உறவினர்கள் வழியாக சுபசெய்திகள் கிடைக்கும். உத்தியோகத்தில் சிலருக்கு வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். நண்பர்களின் ஆலோசனைகளால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பழைய கடன்கள் வசூலாகும்.

ரிஷபம்

இன்று உங்களுக்கு எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். பிள்ளைகளால் சிறு சிறு மனசங்கடங்கள் ஏற்படும். உணவு விஷயத்தில் கட்டுப்பாடுடன் இருந்தால் மருத்துவ செலவுகளை தவிர்க்கலாம். வியாபார ரீதியான பயணங்களால் அலைச்சல்கள் இருந்தாலும் அனுகூலப் பலன் உண்டாகும்.

மிதுனம்

இன்று அலுவலக பணிகளில் ஆர்வமுடன் ஈடுபடுவீர்கள். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வியாபாரத்திற்காக எதிர்பார்த்த உதவி எளிதில் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். பெரிய மனிதர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை தரும்.

கடகம்

இன்று குடும்பத்தில் ஒற்றுமையும், அமைதியும் கூடும். திருமண பேச்சுவார்த்தைகள் நல்ல முடிவுக்கு வரும். பிள்ளைகள் மூலம் மனமகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். புதிய வாகனம் வாங்கி மகிழ்வீர்கள். பெற்றோரின் அன்பை பெறுவீர்கள். வியாபாரத்தில் போட்டி பொறாமைகள் குறையும்.

சிம்மம்

இன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் தாமத பலனையே தரும். உத்தியோகத்தில் சக ஊழியர்களுடன் ஒற்றுமை குறைவு உண்டாகலாம். நண்பர்கள் உதவியாக இருப்பார்கள். தொழிலில் சிறுசிறு மாறுதல்கள் செய்வதன் மூலம் லாபத்தை அடையலாம். பண நெருக்கடிகள் ஓரளவு குறையும்.

கன்னி

இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மன உளைச்சல் அதிகமாகும். செய்யும் வேலைகளில் காலதாமதம் ஏற்படும். தொழில் சம்பந்தமான புதிய முயற்சிகள் எதுவும் செய்யாமல் இருப்பது நல்லது. குடும்பத்தினரிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். எதிலும் கவனம் தேவை.

துலாம்

இன்று இனிய செய்தி இல்லம் தேடி வரும். உறவினர்கள் வருகை உள்ளத்திற்கு மகிழ்வை தரும். தொழிலில் புதிய சலுகைகளை அறிமுகபடுத்தி லாபம் பெறுவீர்கள். உடல் நலம் சிறப்பாக இருக்கும். வேலையில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். சேமிப்பு உயரும்.

விருச்சிகம்

இன்று குடும்பத்தில் மங்கள நிகழ்வுகள் நடைபெறும். பிள்ளைகளோடு இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். தொழில் வளர்ச்சிக்காக போட்ட புதிய திட்டங்கள் வெற்றியை கொடுக்கும். புதிய சொத்துக்கள் வாங்கும் எண்ணம் நிறைவேறும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு கிட்டும்.

தனுசு

இன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும். உறவினர்களால் வீண் விரயங்கள் ஏற்படலாம். உடல் ஆரோக்கியத்தில் வயிறு சம்மந்தப்பட்ட பிரச்சினைகள் ஏற்படும். பெரிய மனிதர்களின் நட்பு நல்ல மாற்றத்தை தரும். தொழிலில் வெளியூர் தொடர்புகள் மூலம் அனுகூலப் பலன்கள் உண்டாகும்.

மகரம்

இன்று உடல்நிலையில் சற்று சோர்வும், சுறுசுறுப்பின்மையும் ஏற்படும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் வீண் செலவுகள் அதிகரிக்கலாம். மதிநுட்பத்துடன் செயல்பட்டால் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபத்தை அடையலாம். வேலையில் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. 

கும்பம்

இன்று மன உறுதியோடு பிரச்சினைகளை எதிர் கொள்வீர்கள். பெற்றோர்கள் ஆதரவாக இருப்பார்கள். தொழிலில் பல புதிய மாற்றங்களால் முன்னேற்றம் ஏற்படும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகமாகும். தெய்வ வழிபாட்டு காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். பணவரவு தாராளமாக இருக்கும்.

மீனம்

இன்று உங்களுக்கு பொருளாதார நிலை சற்று இறக்கமாகவே இருக்கும். வரவை காட்டிலும் செலவுகள் அதிகரிக்கும். சிலருக்கு பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் கிட்டும். வியாபார ரீதியாக எடுக்கும் முயற்சிகளில் சற்று சிந்தித்து செயல்பட்டால் சாதகமான பலன்கள் கிடைக்கும்.

கணித்தவர்


ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001. 9383763001