குறள் : 1086

கொடும்புருவம் கோடா மறைப்பின் நடுங்கஞர்

செய்யல மன்இவள் கண்.


மு.வ உரை :

வளைந்த புருவங்கள் கோணாமல் நேராக இருந்து மறைக்குமானால் இவளுடைய கண்கள் யான் நடுங்கும் படியான துன்பத்தைச் செய்யமாட்டா.


கலைஞர் உரை :

புருவங்கள் வளைந்து கோணாமல் நேராக இருந்து மறைக்குமானால், இவள் கண்கள், நான் நடுங்கும்படியான துன்பத்தைச் செய்யமாட்டா


சாலமன் பாப்பையா உரை :

அதோ வளைந்து இருக்கும் புருவங்கள் வளையாமல் நேராக நின்று தடுத்தால், அவள் கண்கள், எனக்கு நடுக்கம் தரும் துன்பத்தை தரமாட்டா.


Kural 1086

Kotumpuruvam Kotaa Maraippin Natungagnar

Seyyala Manival Kan


Explanation :

Her eyes will cause (me) no trembling sorrow if they are properly hidden by her cruel arched eye-brows.



Horoscope Today: Astrological prediction for April 19, 2023


இன்றைய ராசிப்பலன் - 19.04.2023 | Indraya Nalla Neram | Indraya Panchangam


இன்றைய பஞ்சாங்கம் | Indraya Panchangam

19-04-2023, சித்திரை 06, புதன்கிழமை, தேய்பிறை சதுர்த்தசி திதி பகல் 11.24 வரை பின்பு அமாவாசை. ரேவதி நட்சத்திரம் இரவு 11.53 வரை பின்பு அஸ்வினி. நாள் முழுவதும் மரணயோகம். சர்வ அமாவாசை. கரி நாள். புதிய முயற்சிகளை தவிர்க்கவும். 

இராகு காலம் | Indraya Raagu Kalam

மதியம் 12.00-1.30, எம கண்டம் காலை 07.30-09.00, குளிகன் பகல் 10.30 - 12.00, சுப ஹோரைகள் காலை 06.00-07.00, காலை 09.00-10.00, மதியம் 1.30-2.00, மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00, 11.00-12.00 

இன்றைய ராசிப்பலன் - 19.04.2023 | Today rasi palan - 19.04.2023

மேஷம்

இன்று குடும்பத்தில் தேவையில்லாத டென்ஷன்கள் ஏற்படலாம். பிள்ளைகள் வழியில் மருத்துவ செலவுகள் உண்டாகும். வியாபாரத்தில் இருந்த மந்த நிலை சற்று குறையும். விட்டு கொடுத்து செல்வதன் மூலம் பிரச்சினைகளை தவிர்க்கலாம். எதிர்பார்த்த உதவிகள் உரிய நேரத்தில் கிடைக்கும்.

ரிஷபம்

இன்று நீங்கள் எந்த செயலிலும் புது உற்சாகத்தோடு ஈடுபடுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான நிகழ்ச்சிகள் நிகழும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் அமையும். தொழிலில் புதிய மாற்றங்கள் ஏற்படும். பொருளாதார ரீதியாக இருந்த நெருக்கடிகள் நீங்கும். வருமானம் பெருகும்.

மிதுனம்

இன்று நீங்கள் எந்த காரியத்தையும் மன உறுதியோடு செய்து முடிப்பீர்கள். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பிள்ளைகளுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் விலகும். நீங்கள் எடுக்கும் முயற்சிகள் வெற்றியை தரும். சுப பேச்சுவார்த்தைகள் நல்ல முடிவுக்கு வரும். வங்கி சேமிப்பு உயரும்.

கடகம்

இன்று குடும்பத்தில் ஒற்றுமை குறைந்து காணப்படும். பூர்வீக சொத்துக்களால் வீண் பிரச்சினைகள் ஏற்படலாம். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். வருமானம் பெருகும். ஆன்மீக செயல்களில் ஆர்வம் அதிகரிக்கும்.

சிம்மம்

இன்று நீங்கள் செய்யும் செயல்களில் இடையூறுகள் ஏற்படலாம். எதிர்பாராத மருத்துவ செலவுகள் உண்டாகும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மற்றவர்களின் வீண் பேச்சுக்கு ஆளாக நேரிடும். அறிமுகம் இல்லாதவர்களிடம் அதிகம் பேசாமல் இருப்பது நல்லது. எதிலும் கவனம் தேவை.

கன்னி

இன்று உங்களுக்கு சுபசெலவுகள் உண்டாகும். உறவினர்களால் மகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். தொழில் சம்பந்தமான புதிய கருவிகள் வாங்கும் முயற்சிகள் வெற்றியை தரும். உத்தியோகத்தில் புதிய நபரின் அறிமுகம் கிட்டும்.

துலாம்

இன்று உங்களுக்கு பணவரவு தாரளமாக கிடைக்கும். தேவைகள் யாவும் பூர்த்தியாகும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். தொழில் ரீதியாக எடுக்கும் முயற்சிகளுக்கு குடும்பத்தினர் உறுதுணையாக இருப்பார்கள். உத்தியோகத்தில் இதுவரை இருந்த பிரச்சினைகள் சற்று குறையும்.

விருச்சிகம்

இன்று உங்களுக்கு பிள்ளைகளால் சிறு மனஸ்தாபங்கள் ஏற்படலாம். வண்டி வாகனங்களால் எதிர்பாராத செலவுகள் தோன்றும். பெரிய மனிதர்களின் உதவியால் எதிர்பார்த்த வங்கி கடன் எளிதில் கிடைக்கும். வியாபாரத்தில் கூட்டாளிகளை அனுசரித்து செல்வது நல்லது. வேலை பளு குறையும்.

தனுசு

இன்று குடும்பத்தில் சுப செலவுகள் ஏற்படலாம். நண்பர்கள் வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் தாமதமாகும். அலுவலகத்தில் வேலைபளு கூடும். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் கடன்கள் குறையும். எந்த செயலிலும் நிதானமாகவும், எச்சரிக்கையுடனும் செயல்படுவது நல்லது.

மகரம்

இன்று அதிகாலையிலே ஆனந்தமான செய்திகள் வந்து சேரும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் லாபகரமாக இருக்கும். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு கிட்டும். எடுக்கும் புதிய முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும்.

கும்பம்

இன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும். உடல்நிலையில் சற்று சோர்வும், சுறுசுறுப்பின்மையும் ஏற்படலாம். நண்பர்களின் ஆலோசனைகளால் வியாபாரத்தில் முன்னேற்றம் அடைவீர்கள். உத்தியோகத்தில் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. கடன்கள் ஓரளவு குறையும்.

மீனம்

இன்று உங்களுக்கு பொருளாதாரம் மிகச் சிறப்பாக இருக்கும். பிள்ளைகள் ஆதரவாக இருப்பார்கள். பூர்வீக சொத்துக்களால் லாபகரமான பலன்கள் கிடைக்கும். திருமண சுபமுயற்சிகளில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். அனுபவமுள்ளவரின் ஆலோசனைகள் தொழில் வளர்ச்சிக்கு உதவும்.

கணித்தவர்


ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001. 9383763001