குறள் : 1085
கூற்றமோ கண்ணோ பிணையோ மடவரல்
நோக்கமிம் மூன்றும் உடைத்து.
மு.வ உரை :
எமனோ. கண்ணோ பெண்மானோ இந்த இளம் பெண்ணின் பார்வை இந்த மூன்றன் தன்மையும் உடையதாக இருக்கிறது.
கலைஞர் உரை :
உயிர்பறிக்கும் கூற்றமோ? உறவாடும் விழியோ? மருட்சிகொள்ளும் பெண்மானோ? இளம் பெண்ணின் பார்வை இந்த மூன்று கேள்விகளையும் எழுப்புகிறதே
சாலமன் பாப்பையா உரை :
என்னை துன்புறுத்துவது எமனா? என் மேனி எங்கும் படர்வதால் கண்ணா? ஏதோ ஒரு பயம் தெரிவதால் பெண்மானா? இப்பெண்ணின் பார்வை இம்மூன்று குணங்களையும் பெற்றிருக்கிறது.
Kural 1085
Kootramo Kanno Pinaiyo Matavaral
Nokkamim Moondrum Utaiththu
Explanation :
Is it Yama (a pair of) eyes or a hind ?- Are not all these three in the looks of this maid ?
Horoscope Today: Astrological prediction for April 18, 2023
இன்றைய ராசிப்பலன் - 18.04.2023 | Indraya Nalla Neram | Indraya Panchangam
இன்றைய பஞ்சாங்கம் | Indraya Panchangam
18-04-2023, சித்திரை 05, செவ்வாய்க்கிழமை, திரியோதசி திதி பகல் 01.27 வரை பின்பு தேய்பிறை சதுர்த்தசி. உத்திரட்டாதி நட்சத்திரம் பின்இரவு 01.01 வரை பின்பு ரேவதி. அமிர்தயோகம் பின்இரவு 01.01 வரை பின்பு சித்தயோகம். மாத சிவராத்திரி. சிவ வழிபாடு நல்லது.
இராகு காலம் | Indraya Raagu Kalam
மதியம் 03.00-04.30, எம கண்டம் காலை 09.00-10.30, குளிகன் மதியம் 12.00-1.30, சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00.
இன்றைய ராசிப்பலன் - 18.04.2023 | Today rasi palan - 18.04.2023
மேஷம்
இன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும். உத்தியோகத்தில் வீண் பிரச்சினைகளை சந்திக்க வேண்டி வரும். விட்டு கொடுத்து செல்வதன் மூலம் சிக்கல்களை தவிர்க்கலாம். வியாபாரத்தில் மந்த நிலை இருந்தாலும் லாபம் தடைப்படாது. மனைவி வழி உறவினர்களால் அனுகூலம் கிட்டும்.
ரிஷபம்
இன்று உறவினர்களின் திடீர் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். சுபகாரிய பேச்சுகளில் சாதகமான பலன் உண்டாகும். உத்தியோகத்தில் எதிர்பாராத மாற்றங்கள் ஏற்படும். வியாபார ரீதியான கொடுக்கல் வாங்கலில் எதிர்பார்த்த லாபம் கிட்டும். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும்.
மிதுனம்
இன்று உங்களுக்கு பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். உறவினர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். திருமண முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். வியாபாரத்தில் புதிய கூட்டாளிகளால் நல்ல லாபம் கிடைக்கும். உத்தியோக ரீதியான பயணங்களால் அனுகூலம் கிட்டும்.
கடகம்
இன்று உங்களுக்கு எதிர்பாராத மருத்துவ செலவுகள் ஏற்படலாம். குடும்பத்தில் பெரியவர்களுடன் வீண் வாக்குவாதங்கள் தோன்றும். பணவரவு சுமாராக இருக்கும். எதிலும் சிக்கனம் தேவை. புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் சில இடையூறுகள் ஏற்பட்டாலும் குடும்பத்தினரின் ஆதரவு கிட்டும்.
சிம்மம்
இன்று உங்களுக்கு உழைப்பிற்கேற்ற பலன் கிடைப்பதில் காலதாமதமாகும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படும். உணவு விஷயத்தில் கட்டுப்பாடு தேவை. வெளியில் வாகனங்களில் செல்லும் பொழுது நிதானமாக செல்ல வேண்டும்.
கன்னி
இன்று உங்களின் மதிப்பும் மரியாதையும் உயரும். எடுக்கும் காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். வேலை விஷயமாக வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். திடீர் பணவரவு உண்டாகும். கடன் பிரச்சினை தீரும். தொழில் சம்பந்தமான புதிய திட்டங்கள் வெற்றியை ஏற்படுத்தும்.
துலாம்
இன்று நீங்கள் செய்யும் செயல்களில் சுறுசுறுப்புடன் ஈடுபடுவீர்கள். புதிய பொருட்கள் வீடு வந்து சேரும். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். வெளியூர் பயணங்களால் நற்பலன்கள் கிட்டும். தொழில் சம்பந்தமான வழக்குகளில் வெற்றி வாய்ப்பு உண்டாகும்.
விருச்சிகம்
இன்று உங்களுக்கு வீண் செலவுகள் ஏற்படும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைப்பதில் சில தடங்கல்கள் ஏற்படலாம். எதையும் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது. உங்களின் முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஒத்துழைப்பு கிடைக்கும். எதிலும் சிக்கனமாக இருப்பது நல்லது.
தனுசு
இன்று உங்களுக்கு உறவினர்கள் மூலம் பிரச்சினைகள் வரலாம். தொழிலில் எதிர்பாராத செலவுகளை சமாளிக்க கடன்கள் வாங்க நேரிடும். பிள்ளைகளால் மனமகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும். உத்தியோகத்தில் அதிகாரிகளை அனுசரித்து செல்வதன் மூலம் நற்பலன்களை அடையலாம்.
மகரம்
இன்று உங்களுக்கு பொருளாதாரம் சிறப்பாக அமையும். குடும்பத்தில் சந்தோஷமான சூழ்நிலை உருவாகும். நண்பர்களின் உதவியால் வியாபார ரீதியான பிரச்சினைகள் நீங்கும். நவீன பொருட்கள் வாங்கும் வாய்ப்பு ஏற்படும். எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். உடல் ஆரோக்கியம் சீராகும்.
கும்பம்
இன்று நீங்கள் எந்த ஒரு செயலிலும் மனக்குழப்பத்துடன் செயல்படுவீர்கள். வெளி பயணங்களால் வீண் அலைச்சல், சோர்வு உண்டாகும். சுப காரிய முயற்சிகளில் சற்று சிந்தித்து செயல்பட்டால் சாதகமான பலனை அடையலாம். சிக்கனத்தை கடைபிடித்தால் பணப்பிரச்சினைகள் ஓரளவு குறையும்.
மீனம்
இன்று உங்களுக்கு பிள்ளைகளால் வீட்டில் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். உறவினர்கள் வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரத்தில் இதுவரை வராத பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் பணிசுமை குறையும்.