குறள் : 1080
எற்றிற் குரியர் கயவரொன்று உற்றக்கால்
விற்றற்கு உரியர் விரைந்து.
மு.வ உரை :
கயவர் எதற்கு உரியவர் ஒரு துன்பம் வந்தடைந்த காலத்தில் அதற்காக தம்மை பிறர்க்கு விலையாக விற்றுவிடுவதற்கு உரியவர் ஆவர்.
கலைஞர் உரை :
ஒரு துன்பம் வரும்போது அதிலிருந்து தப்பித்துக் கொள்ள, தம்மையே பிறரிடம் விற்றுவிடுகிற தகுதிதான் கயவர்களுக்குரிய தகுதியாகும்
சாலமன் பாப்பையா உரை :
தமக்கு லாபமோ நட்டமோ வரும் என்றால் தம்மைப் பிறர்க்கு அடிமை ஆக்குவர்; இதற்கு அன்றி வேறு எந்தத் தொழிலுக்குக் கயவர் உரியர் ஆவர்?
Kural 1080
Etrir Kuriyar Kayavarondru Utrakkaal
Vitrarku Uriyar Viraindhu
Explanation :
The base will hasten to sell themselves as soon as a calamity has befallen them. For what else are they fitted?
Horoscope Today: Astrological prediction for April 13, 2023
இன்றைய ராசிப்பலன் - 13.04.2023 | Indraya Nalla Neram | Indraya Panchangam
இன்றைய பஞ்சாங்கம் | Indraya Panchangam
13-04-2023, பங்குனி 30, வியாழக்கிழமை, அஷ்டமி திதி பின்இரவு 01.35 வரை பின்பு தேய்பிறை நவமி. பூராடம் நட்சத்திரம் பகல் 10.43 வரை பின்பு உத்திராடம். நாள் முழுவதும் சித்தயோகம். பைரவர் வழிபாடு நல்லது. புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.
இராகு காலம் | Indraya Raagu Kalam
மதியம் 01.30-03.00, எம கண்டம்- காலை 06.00-07.30, குளிகன் காலை 09.00-10.30, சுப ஹோரைகள் - காலை 09.00-11.00, மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00, இரவு 08.00-09.00.
இன்றைய ராசிப்பலன் - 13.04.2023 | Today rasi palan - 13.04.2023
மேஷம்
இன்று உறவினர்கள் வருகையால் இல்லத்தில் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். நண்பர்களின் ஆலோசனைகள் வியாபாரத்தில் நற்பலன்களை தரும். திருமண சுப முயற்சிகளில் முன்னேற்ற நிலை ஏற்படும். தெய்வ தரிசனத்திற்காக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். வங்கி சேமிப்பு உயரும்.
ரிஷபம்
இன்று நீங்கள் செய்யும் செயல்களில் தடை தாமதங்கள் ஏற்படலாம். உங்கள் ராசிக்கு மாலை 04.22 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் கவனம் தேவை. மதியத்திற்கு பிறகு மன அமைதி உண்டாகும். உடல் ஆரோக்கியம் சீராகும். கொடுக்கல் வாங்கலில் இருந்த பிரச்சினைகள் குறையும்.
மிதுனம்
இன்று உங்கள் ராசிக்கு மாலை 04.22 மணியிலிருந்து சந்திராஷ்டமம் இருப்பதால் நீங்கள் செய்யும் செயல்களில் கவனமாக இருப்பது நல்லது. குடும்பத்தில் அமைதியற்ற சூழ்நிலை உருவாகும். வியாபார ரீதியான பயணங்களில் அலைச்சலுக்கு பின் லாபம் கிட்டும். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை.
கடகம்
இன்று நீங்கள் எந்த செயலையும் முழு ஈடுபாட்டுடன் செய்வீர்கள். பிள்ளைகள் வழியில் அனுகூலம் உண்டாகும். உத்தியோகத்தில் வெளியூர் பயணங்களால் முன்னேற்றம் அடைவீர்கள். வியாபாரத்தில் சிறு மாற்றங்கள் செய்வதன் மூலம் நல்ல லாபம் கிட்டும். சிறப்பான பணவரவால் கடன்கள் குறையும்.
சிம்மம்
இன்று குடும்பத்தில் பிள்ளைகள் வழியில் மன மகிழ்ச்சி ஏற்படும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் அனுகூலமான பலன்கள் உண்டாகும். தேவையற்ற செலவுகளை குறைப்பதன் மூலம் சேமிப்பு கூடும். பெரிய மனிதர்களின் ஆலோசனைகள் தொழில் வளர்ச்சிக்கு பெரிதும் உதவும். வருமானம் பெருகும்.
கன்னி
இன்று நீங்கள் எடுத்த முயற்சியில் இருந்த தடைகள் விலகி நல்லது நடக்கும். குடும்பத்தில் பொருளாதார ரீதியாக இருந்த நெருக்கடிகள் விலகும். உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வேலையில் உடன் பணிபுரிபவர்களுடன் சுமூக உறவு உண்டாகும்.
துலாம்
இன்று குடும்பத்தில் சுபசெலவுகள் செய்வதற்கான வாய்ப்புகள் உருவாகும். உறவினர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். சுபகாரியங்கள் கைகூடும். வேலையில் உடன் பணிபுரிபவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். தொழில் ரீதியாக லாபம் அதிகரிக்கும், மறைமுக எதிர்ப்புகள் விலகும்.
விருச்சிகம்
இன்று வேலையில் எதிர்பாராத பிரச்சினைகளை சந்திக்க வேண்டி வரும். செலவுகளை சமாளிக்க கடன்கள் வாங்கும் சூழ்நிலை உருவாகலாம். தொழிலில் சற்று மந்த நிலை இருக்கும். எடுக்கும் முயற்சிகளுக்கு குடும்பத்தினர் உறுதுணையாக இருப்பார்கள். உறவினர்களின் ஆதரவு கிட்டும்.
தனுசு
இன்று உறவினர்கள் வருகையால் சுபசெலவுகள் உண்டாகும். எடுக்கும் முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். தொழில் ரீதியாக எதிர்பார்த்த வங்கி கடன் கிடைப்பதற்கான அறிகுறிகள் தென்படும். பெரிய மனிதர்களால் அனுகூலம் உண்டாகும். புதிய வண்டி வாகனம் வாங்கும் எண்ணம் நிறைவேறும்.
மகரம்
இன்று பிள்ளைகளால் எதிர்பாராத விரயங்கள் ஏற்படலாம். உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் வீண் பிரச்சினைகள் உண்டாகும். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் பணபற்றாக்குறையை தவிர்க்கலாம். தொழிலில் கூட்டாளிகளை அனுசரித்து செல்ல வேண்டியிருக்கும். எதிர்பாராத உதவிகள் கிட்டும்.
கும்பம்
இன்று பிள்ளைகளால் மகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். வேலையில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வெளியூரிலிருந்து வரவேண்டிய தொகை வந்து சேரும்.
மீனம்
இன்று உங்கள் திறமைகளை வெளிப்படுத்தும் நாளாக இந்த நாள் அமையும். குடும்பத்தில் சுப செலவுகள் ஏற்படும். வேலையில் உடன் பணிபுரிபவர்களிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். தொழில் சம்பந்தமான வழக்குகளில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001. 9383763001