குறள் : 1077

ஈர்ங்கை விதிரார் கயவர் கொடிறுடைக்கும்

கூன்கையர் அல்லா தவர்க்கு.


மு.வ உரை :

கயவர் தம் கன்னத்தை இடித்து உடைக்கும் படி வளைந்த கை உடையவரல்லாத மற்றவர்க்கு உண்ட எச்சில் கையையும் உதற மாட்டார்.

கலைஞர் உரை :

கையை மடக்கிக் கன்னத்தில் ஒரு குத்துவிடுகின்ற முரடர்களுக்குக் கொடுப்பார்களேயல்லாமல், ஈகைக் குணமில்லாத கயவர்கள் ஏழை எளியோருக்காகத் தமது எச்சில் கைகைக்கூட உதற மாட்டார்கள்

சாலமன் பாப்பையா உரை :

தாடையை உடைக்கும் முறுக்கிய கை இல்லாதவர்க்குக் கயவர், தாம் உண்டு கழுவிய ஈரக் கையைக்கூட உதறமாட்டார்.


Kural 1077

Eerngai Vidhiraar Kayavar Kotirutaikkum

Koonkaiyar Allaa Thavarkku

Explanation :

The mean will not (even) shake of (what sticks to) their hands (soon after a meal) to any but those who would break their jaws with their clenched fists.

Horoscope Today: Astrological prediction for April 10, 2023

இன்றைய ராசிப்பலன் - 10.04.2023 | Indraya Nalla Neram | Indraya Panchangam


இன்றைய பஞ்சாங்கம் | Indraya Panchangam


10-04-2023, பங்குனி 27, திங்கட்கிழமை, சதுர்த்தி திதி காலை 08.37 வரை பின்பு தேய்பிறை பஞ்சமி. அனுஷம் நட்சத்திரம் பகல் 01.39 வரை பின்பு கேட்டை. நாள் முழுவதும் சித்தயோகம். சுபமுகூர்த்த நாள். சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள். 

இராகு காலம் | Indraya Raagu Kalam 

காலை 07.30 -09.00, எம கண்டம்- 10.30 - 12.00, குளிகன்- மதியம் 01.30-03.00, சுப ஹோரைகள்- மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00, இரவு 10.00-11.00.

இன்றைய ராசிப்பலன் - 10.04.2023 | Today rasi palan - 10.04.2023

மேஷம்

இன்று குடும்பத்தில் தேவையில்லாத டென்ஷன் ஏற்படலாம். எதிலும் நிம்மதியில்லாத நிலை தோன்றும். வெளியிலிருந்து வர வேண்டிய தொகை கைக்கு கிடைப்பதில் காலதாமதமாகும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எந்த ஒரு செயலிலும் நிதானமாக செயல்படுவது நல்லது.

ரிஷபம்

உங்களுக்கு பணவரவு தாராளமாக இருக்கும். பொன்பொருள் வாங்கும் யோகம் சிலருக்கு உண்டு. குடும்பத்தில் உள்ள பிரச்சினை தீர்ந்து மகிழ்ச்சி நிலவும். தொழிலில் உள்ள போட்டி பொறாமைகள் குறையும். எதிலும் தெம்போடு செயல்படுவீர்கள். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை கொடுக்கும்.

மிதுனம்

இன்று நீங்கள் எந்த செயலிலும் புது உற்சாகத்தோடு ஈடுபடுவீர்கள். குடும்பத்தில் உள்ளவர்களின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். மாணவர்களுக்கு படிப்பில் தங்கள் திறமைகளை வெளிபடுத்த புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வேலையில் சக ஊழியர்களுடன் சுமூக உறவு ஏற்படும். வருமானம் பெருகும்.

கடகம்

இன்று உங்களுக்கு எதிர்பாராத வீண் பிரச்சினைகள் ஏற்படலாம். கொடுக்கல் வாங்கலில் கொடுத்த கடன் திரும்ப பெறுவதில் சிக்கல்கள் உண்டாகும். உத்தியோகத்தில் நெருக்கடிகள் இருந்தாலும் உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பு கிட்டும். மன அமைதி பெற தெய்வ வழிபாடு செய்வது நல்லது.

சிம்மம்

இன்று உங்களுக்கு வண்டி வாகனங்களால் சிறு விரயங்கள் ஏற்படலாம். பணவிஷயத்தில் சிக்கனத்துடன் இருப்பது நல்லது. தொழில் வியாபார ரீதியாக எடுக்கும் முயற்சிகளில் சற்று சிந்தித்து செயல்பட்டால் நற்பலனை பெற முடியும். வேலையில் உடனிருப்பவர்களால் அனுகூலம் உண்டாகும்.

கன்னி

இன்று உங்கள் உடல் ஆரோக்கிய பாதிக்கும். குடும்பத்தில் செலவுகள் கட்டுக்குள் இருக்கும். தொழிலில் உள்ள மந்த நிலை மாறும். வேலையாட்கள் சாதகமாக இருப்பார்கள். மனைவி வழி உறவினர்களால் அனுகூலங்கள் உண்டாகும். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவீர்கள்.

துலாம்

இன்று உங்களுக்கு பொருளாதார நிலை சுமாராக இருக்கும். உடன்பிறப்புகள் வழியில் சுப செலவுகள் ஏற்படும். தொழில் வியாபார ரீதியான பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் அனுகூலப் பலன்கள் உண்டாகும். கடன் பிரச்சினைகள் குறைய சற்று சிக்கனமாக செயல்படுவது நல்லது.

விருச்சிகம்

இன்று நீங்கள் வேலையில் புது பொலிவுடனும், தெம்புடனும் செயல்படுவீர்கள். நண்பர்களின் ஆலோசனைகளால் உங்கள் பிரச்சினைகளுக்கு நல்ல தீர்வு கிடைக்கும். அரசு துறையில் இருப்பவர்களுக்கு நற்பலன்கள் உண்டாகும். வியாபார ரீதியாக பெரிய மனிதர்களின் நட்பு ஏற்படும்.

தனுசு

இன்று உங்களின் ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை. தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைப்பதில் சில இடையூறுகள் ஏற்படலாம். உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். பெரிய மனிதர்களின் ஆலோசனைகளை பெறுவீர்கள். கடன்கள் ஓரளவு குறையும்.

மகரம்

இன்று குடும்பத்தில் எதிர்பாராத சுப செலவுகள் செய்ய நேரிடும். எடுக்கும் முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். வேலையில் உடனிருப்பவர்களால் இருந்த பிரச்சினைகள் விலகும். திடீர் பயணம் உண்டாகும். கூட்டாளிகளின் ஒத்துழைப்போடு தொழிலில் எதிர்பார்த்த லாபத்தை அடைவீர்கள். 

கும்பம்

இன்று உங்களுக்கு அமோகமான பலனை தரும் நாளாக இருக்கும். தொழிலில் உங்கள் மதிப்பு கூடும். குடும்பத்தில் தாராள பண வரவும், மகிழ்ச்சியும் உண்டாகும். திருமண முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உறவினர்கள் வழியில் அனுகூலம் கிட்டும். உடல் ஆரோக்கியம் சீராகும்.

மீனம்

இன்று பணவரவு ஓரளவு சுமாராக இருக்கும். பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படலாம். உறவினர்களுடன் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். வேலையில் பொறுப்புடன் நடந்து கொள்வதன் மூலம் உங்களின் மதிப்பு உயரும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும்.





கணித்தவர்


ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001. 9383763001