குறள் : 1075

அச்சமே கீழ்களது ஆசாரம் எச்சம்

அவாவுண்டேல் உண்டாம் சிறிது.


மு.வ உரை :

கீழ் மக்களின் ஆசாரத்திற்கு காரணமாக இருப்பது அச்சமே எஞ்சியவற்றில் அவா உண்டானால் அதனாலும் சிறிதளவு ஆசாரம் உண்டாகும்.

கலைஞர் உரை :

தாங்கள் விரும்புவது கிடைக்கும் என்ற நிலையேற்படும்போது கீழ்மக்கள், தங்களை ஒழுக்கமுடையவர்கள் போலக் காட்டிக் கொள்வார்கள் மற்ற சமயங்களில் அவர்கள் பயத்தின் காரணமாக மட்டுமே ஓரளவு ஒழுக்கமுள்ளவர்களாக நடந்து கொள்வார்கள்

சாலமன் பாப்பையா உரை :

கயவர்களிடம் நல்ஒழுக்கம் இருந்தால் ஆட்சியைப் பற்றிய பயமே காரணம் ஆகும். அதையும் மீறி அவர்கள் ஆசைப்படும் பொருள் கிடைப்பதாக இருந்தால் அதனாலும் கொஞ்சம் ஒழுக்கம் இருக்கும்.


Kural 1075

Achchame Keezhkaladhu Aasaaram Echcham

Avaavuntel Untaam Siridhu

Explanation :

(The principle of) behavior in the mean is chiefly fear; if not hope of gain to some extent.


Horoscope Today: Astrological prediction for April 08, 2023


இன்றைய ராசிப்பலன் - 08.04.2023 | Indraya Nalla Neram | Indraya Panchangam


இன்றைய பஞ்சாங்கம் | Indraya Panchangam


23, பங்குனி 25, சனிக்கிழமை, துதியை திதி பகல் 10.11 வரை பின்பு தேய்பிறை திரிதியை. சுவாதி நட்சத்திரம் பகல் 01.58 வரை பின்பு விசாகம். நாள் முழுவதும் சித்தயோகம். லக்ஷ்மி நரசிம்மருக்கு உகந்த நாள்.  

இராகு காலம் | Indraya Raagu Kalam 

காலை 09.00-10.30, எம கண்டம் மதியம் 01.30-03.00, குளிகன் காலை 06.00-07.30, சுப ஹோரைகள் - காலை 07.00-08.00, பகல் 10.30-12.00, மாலை 05.00-07.00. இரவு 09.00-10.00. 

இன்றைய ராசிப்பலன் - 08.04.2023 | Today rasi palan - 08.04.2023

மேஷம்

இன்று உங்கள் உடல் ஆரோக்கியம் சீராக அமையும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். பெரிய மனிதர்களின் நட்பு மனதிற்கு தெம்பை கொடுக்கும். உறவினர்கள் வழியில் எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கும். ஆன்மீக தெய்வீக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும்.

ரிஷபம்

இன்று உங்களுக்கு அதிகாலையிலே ஆனந்தமான செய்தி வந்து சேரும். திருமண சுப முயற்சிகளில் அனுகூலப் பலன்கள் உண்டாகும். பொன்பொருள் சேர்க்கை மனதிற்கு மகிழ்ச்சி தரும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை வாய்ப்பு அமையும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.

மிதுனம்

இன்று குடும்பத்தில் பொருளாதார நெருக்கடியால் வீண் பிரச்சினைகள் ஏற்படும். தேவையற்ற செலவுகளால் உங்கள் கையிருப்பு குறையும். வேலையில் அதிகாரிகளின் கெடுபிடிகள் அதிகரித்தாலும் உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பு கிட்டும். உடன் பிறந்தவர்கள் உதவிக்கரம் நீட்டுவர்.

கடகம்

இன்று உங்களுக்கு பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் ஏற்படலாம். எதிர்பார்த்த உதவிகள் ஏமாற்றத்தை அளிக்கும். அரசியல் பிரமுகர்களால் அனுகூலம் உண்டாகும். நண்பர்களின் ஆலோசனைகளால் வியாபாரத்தில் நற்பலன் கிடைக்கும். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை.

சிம்மம்

இன்று உங்களுக்கு பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். பெற்றோருடன் இருந்த மனஸ்தாபம் நீங்கி மகிழ்ச்சி உண்டாகும். கடினமான காரியங்களை கூட எளிதில் செய்து முடித்து அனைவரின் பாராட்டுதல்களை பெறுவீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகளால் அனுகூலப் பலன் உண்டாகும்.

கன்னி

இன்று உங்களுக்கு பிள்ளைகளால் மனநிம்மதி குறையும். தூர பயணங்களால் அலைச்சல் உடல் சோர்வு உண்டாகும். உத்தியோகத்தில் உடனிருப்பவர்களை அனுசரித்து சென்றால் நல்ல முன்னேற்றம் ஏற்படும். மனைவி வழி உறவினர்களால் அனு-கூலமான பலன் உண்டாகும். தெய்வ வழிபாடு நல்லது.

துலாம்

இன்று குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் நிலவும். உறவினர்கள் வழியாக சுப செய்திகள் தேடி வரும். நீங்கள் எதிர்பார்த்த உதவிகள் இன்று கிடைக்கும். வியாபாரத்தில் இருந்த மறைமுக எதிர்ப்புகள் மறைந்து புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உங்களின் பொருளாதார தேவைகள் நிறைவேறும்.

விருச்சிகம்

இன்று உங்களுக்கு பணம் சம்பந்தமான கொடுக்கல் வாங்கலில் இழுபறி நிலை ஏற்படும். சிலருக்கு பூர்வீக சொத்துக்களால் வீண் விரயங்கள் உண்டாகும். தொழிலில் இருந்த போட்டிகள் விலகும். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் சுமூகமாக முடியும். உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும்.

தனுசு

இன்று நீங்கள் குடும்பத்தினரின் உதவியுடன் புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். சிலருக்கு வண்டி வாகனங்களை வாங்கும் யோகம் உண்டாகும். வியாபாரத்தில் இருந்த எதிர்ப்புகள் குறைந்து முன்னேற்றம் ஏற்படும். திடீர் பணவரவு உண்டாகி குடும்ப தேவைகள் அனைத்தும் நிறைவேறும்.

மகரம்

இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பிள்ளைகளின் படிப்பில் முன்னேற்றம் ஏற்படும். வியாபாரத்தில் எதிரிகள் கூட நண்பர்களாக செயல்படுவார்கள். உத்தியோகத்தில் இருந்த போட்டி பொறாமைகள் குறையும். கடன்கள் நீங்கும்.

கும்பம்

இன்று உறவினர்களிடம் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும். வெளியூர் பயணங்களில் வீண் பிரச்சினைகள் ஏற்படும். உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கப்பெற்று குடும்பத்தோடு சேரும் வாய்ப்பு அமையும். பிள்ளைகளால் செலவுகள் ஏற்பட்டாலும் சுப செய்தி கிட்டும்.

மீனம்

இன்று நீங்கள் செய்யும் செயல்களில் தாமத நிலை உண்டாகும். தேவையற்ற பயணங்களால் வீண் அலைச்சல் ஏற்படும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் நிதானம் தேவை. உத்தியோகத்தில் மேலதிகாரிகளிடம் பொறுமையாக நடப்பதன் மூலம் பிரச்சினைகளை தவிர்க்கலாம்.





கணித்தவர்


ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001. 9383763001