குறள் : 1071

மக்களே போல்வர் கயவர் அவரன்ன
ஒப்பாரி யாங்கண்ட தில்.

மு.வ உரை :

மக்களே போல் இருப்பார் கயவர் அவர் மக்களை ஒத்திருப்பது போன்ற ஒப்புமை வேறு எந்த இருவகைப் பொருள்களிடத்திலும் யாம் கண்டதில்லை.

கலைஞர் உரை :

குணத்தில் கயவராக இருப்பர் ஆனால், நல்லவரைப் போலக் காட்டிக் கொள்வார் மனிதர்களிடம் மட்டும்தான் இப்படி இருவகையான நிலைகளை ஒரே உருவத்தில் காண முடியும்

சாலமன் பாப்பையா உரை :

கயவர் வெளித்தோற்றத்தில் மனிதரைப் போலவே இருப்பர்; விலங்கு பறவை போன்ற பிற இனங்களில் அவருக்கு ஒப்பானவரை நான் கண்டது இல்லை.

Kural 1071

Makkale Polvar Kayavar Avaranna
Oppaari Yaanganta Thil

Explanation :

The base resembles men perfectly (as regards form), and we have not seen such (exact) resemblance (among any other species).


Horoscope Today: Astrological prediction for April 04, 2023

இன்றைய ராசிப்பலன் - 04.04.2023 | Indraya Nalla Neram | Indraya Panchangam


இன்றைய பஞ்சாங்கம் | Indraya Panchangam

04-04-2023, பங்குனி 21, செவ்வாய்க்கிழமை, திரியோதசி திதி காலை 08.05 வரை பின்பு வளர்பிறை சதுர்த்தசி. பூரம் நட்சத்திரம் காலை 09.36 வரை பின்பு உத்திரம். சித்தயோகம் காலை 09.36 வரை பின்பு அமிர்தயோகம். லக்ஷ்மி நரசிம்மருக்கு உகந்த நாள்.

இராகு காலம் | Indraya Raasi Palan

மதியம் 03.00-04.30, எம கண்டம் காலை 09.00-10.30, குளிகன் மதியம் 12.00-1.30, சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00. 

இன்றைய ராசிப்பலன் - 04.04.2023 | Today rasi palan - 04.04.2023


மேஷம்

இன்று உறவினர்களால் வீண் செலவு ஏற்படலாம். குடும்பத்தில் பெரியவர்களுடன் கருத்து வேறுபாடு உண்டாகும். அலுவலகத்தில் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. வியாபார விஷயமாக மேற்கொள்ளும் பயணம் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும். எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கும்.

ரிஷபம்

இன்று குடும்பத்தில் ஒற்றுமை குறைவு உண்டாகலாம். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் அதிருப்திக்கு ஆளாவீர்கள். வீண் செலவுகளால் சேமிப்பு குறையும். வெளியூர் பயணங்களால் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். உடன்பிறந்தவர்கள் உங்கள் வளர்ச்சிக்கு உதவியாக இருப்பார்கள்.

மிதுனம்

இன்று உங்களுக்கு பணவரவு அமோகமாக இருக்கும். புதிய பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். வேலையில் சக ஊழியர்களிடம் ஒற்றுமை நிலவும். இதுவரை இருந்த போட்டி பொறாமைகள் குறையும். கூட்டாளிகளின் உதவியால் தொழிலில் இருந்த பிரச்சினைகள் தீரும். குடும்பத்தில் அமைதி நிலவும்.

கடகம்

இன்று உங்களுக்கு பிள்ளைகளால் அலைச்சல் அதிகரிக்கலாம். நண்பர்களுடன் கருத்து வேறுபாடுகள் தோன்றும். பூர்வீக சொத்துக்கள் வழியில் அனுகூலப்பலன்கள் கிட்டும். தொழிலில் சிறுசிறு மாறுதல்கள் செய்தால் லாபத்தை அடைய முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு குறையும்.

சிம்மம்

இன்று உத்தியோகத்தில் மனம் மகிழும் மாற்றங்கள் உண்டாகும். புதிய முயற்சிகளில் நண்பர்களின் ஆலோசனைகள் நற்பலனை தரும். உறவினர்கள் உதவியாக இருப்பார்கள். தொழிலில் புதிய திட்டங்கள் வெற்றியை தரும். கொடுத்த கடன் வசூலாகும். குடும்பத்தில் சுபகாரியங்கள் கைகூடும்.

கன்னி

இன்று உங்களுக்கு வரவை காட்டிலும் செலவுகள் அதிகமாகும். உற்றார் உறவினர்களுடன் சிறுசிறு மனஸ்தாபங்கள் தோன்றலாம். விட்டு கொடுத்து செல்வதன் மூலம் பிரச்சினைகளை தவிர்க்கலாம். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள். நண்பர்களால் அனுகூலம் உண்டாகும்.

துலாம்

இன்று உங்கள் ஆரோக்கியம் சீராக இருக்கும். குடும்பத்தில் திடீரென்று சுபசெய்திகள் வந்து சேரும். சகோதர, சகோதரிகள் நட்புடன் இருப்பார்கள். வேலையில் மேலதிகாரிகளுடன் இருந்த பிரச்சினைகள் தீரும். பூர்வீக சொத்துக்களால் லாபம் ஏற்படும். வியாபாரத்தில் லாபம் திருப்திகரமாக இருக்கும்.

விருச்சிகம்

இன்று நீங்கள் எந்த செயலையும் மனஉறுதியோடு செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். பிள்ளைகள் ஆதரவாக இருப்பார்கள். திருமண சுபமுயற்சிகளில் சாதகப் பலன் உண்டாகும். தொழில் வியாபார ரீதியான புதிய முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

தனுசு

இன்று நீங்கள் நினைத்த காரியம் நிறைவேற உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. வியாபாரத்தில் எதிர்பாராத பண நெருக்கடிகள் ஏற்படும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு அதிகரித்தாலும் அதற்கான நற்பலன்கள் கிடைக்கும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும்.

மகரம்

இன்று உங்களுக்கு எதிர்பாராத மருத்துவ செலவுகள் உண்டாகலாம். உங்கள் ராசிக்கு மாலை 4.05 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் எந்த விஷயத்திலும் அவசரம் காட்டாமல் பொறுமையுடன் செயல்படுவது நல்லது. மாலை நேரத்திற்கு பிறகு உங்களுக்கு இருக்கும் நெருக்கடிகள் குறையும்.

கும்பம்

இன்று நீங்கள் செய்யும் செயல்கள் பாதியில் தடைபட்டு உங்களுக்கு மனஉளைச்சலை உண்டாக்கும். உங்கள் ராசிக்கு மாலை 4.05 மணிக்கு மேல் சந்திராஷ்டமம் இருப்பதால் சுப காரியங்களை தவிர்ப்பது, பிறர் விஷயங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது. ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

மீனம்

இன்று உங்களுக்கு பொருளாதாரம் சிறப்பாக அமையும். தொழில் ரீதியாக எதிர்ப்பார்த்த வங்கி கடன்கள் கிடைக்கும். நண்பர்கள் மூலம் உதவிகள் கிட்டும். பிள்ளைகளுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். பெரிய மனிதர்களின் அறிமுகம் மனதிற்கு புது தெம்பை கொடுக்கும்.

கணித்தவர்


ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001. 9383763001