குறள் : 1070

கரப்பவர்க்கு யாங்கொளிக்கும் கொல்லோ இரப்பவர்

சொல்லாடப் போஒம் உயிர்.


மு.வ உரை :

இரப்பவர் இல்லை என்று சொல்கின்ற அளவிலேயே உயிர் போகின்றதே உள்ளதை இல்லை என்று ஒளிப்பவர்க்கு உயிர் எங்கு ஒளிந்திருக்குமோ.

கலைஞர் உரை :

இருப்பதை ஒளித்துக்கொண்டு இல்லை என்பவர்களின் சொல்லைக் கேட்டவுடன், இரப்போரின் உயிரே போய் விடுகிறதே; அப்படிச் சொல்பவர்களின் உயிர் மட்டும் எங்கே ஒளிந்துகொண்டு இருக்குமோ?

சாலமன் பாப்பையா உரை :

இல்லை என்று சொல்வதைக் கேட்ட உடனே பிச்சை எடுப்பவரிடமிருந்து போய் விடும் உயிர், இல்லை என்று சொல்பவர்க்கு மட்டும் போகாமல் எங்கே போய் ஒளிந்து கொள்கிறது?


Kural 1070

Karappavarkku Yaangolikkum Kollo Irappavar

Sollaatap Poom Uyir

Explanation :

Saying “No” to a beggar takes away his life. (but as that very word will kill the refuser) where then would the latter’s life hide itself ?


Horoscope Today: Astrological prediction for April 03, 2023


இன்றைய ராசிப்பலன் - 03.04.2023 | Indraya Nalla Neram | Indraya Panchangam


இன்றைய பஞ்சாங்கம் | Indraya Panchangam

03-04-2023, பங்குனி 20, திங்கட்கிழமை, துவாதசி திதி காலை 06.24 வரை பின்பு வளர்பிறை திரியோதசி. மகம் நட்சத்திரம் காலை 07.23 வரை பின்பு பூரம். மரணயோகம் காலை 07.23 வரை பின்பு சித்தயோகம். பிரதோஷ விரதம். சிவ வழிபாடு நல்லது. மஹாவீர் ஜெயந்தி. 

இராகு காலம் | Indraya Raagu Kalam 

காலை 07.30 -09.00, எம கண்டம்- 10.30 - 12.00, குளிகன்- மதியம் 01.30-03.00, சுப ஹோரைகள்- மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00,  இரவு 10.00-11.00. 

இன்றைய ராசிப்பலன் - 03.04.2023 | Today rasi palan - 03.04.2023

மேஷம்

இன்று உங்களுக்கு வேலை நிமித்தமாக உடல் சோர்வும் அலைச்சலும் உண்டாகும். ஆடம்பர செலவுகளால் கையிருப்பு குறையலாம். எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். உடன் பிறந்தவர்கள் ஓரளவிற்கு ஆதரவாக இருப்பார்கள். எடுக்கும் முயற்சிகளில் கவனம் தேவை.

ரிஷபம்

இன்று குடும்பத்தில் அமைதியற்ற சூழ்நிலை ஏற்படும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்க உணவு விஷயத்தில் கட்டுப்பாடுடன் இருப்பது நல்லது. எடுக்கும் முயற்சிகளில் சிந்தித்து செயல்பட்டால் வெற்றியை அடையலாம். சிலருக்கு வெளியூர் பயணங்கள் மூலம் அனுகூலப் பலன் உண்டாகும். 

மிதுனம்

இன்று உங்கள் திறமைகளை வெளிபடுத்தும் நாளாக இந்த நாள் அமையும். நினைத்த காரியத்தை நல்லபடியாக செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். வியாபாரத்தில் எதிரிகள் கூட நண்பர்களாக செயல்படுவார்கள். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். கடன் பிரச்சினைகள் தீரும்.

கடகம்

இன்று உங்களுக்கு பணவரவு சுமாராகத்தான் இருக்கும். நண்பர்கள் முலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உடலில் சிறுசிறு உபாதைகள் ஏற்படும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பணிகளில் வேலைபளு இருந்தாலும் ஆதாயம் கிடைக்கும். குடும்பத்தினரின் ஆதரவு மகிழ்ச்சியை அளிக்கும்.

சிம்மம்

இன்று குடும்பத்தில் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். திருமண முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். தொழில் ரீதியாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். அரசு வழியில் எதிர்பார்க்கும் கடன் உதவி கிட்டும். புதிய நபரின் அறிமுகம் ஏற்படும். உங்கள் திறமைகேற்ப பதவி உயர்வு கிடைக்கும்.

கன்னி

இன்று குடும்பத்தில் எதிர்பாராத மருத்துவ செலவுகள் செய்ய நேரிடும். பணவரவு தாரளமாக இருந்தாலும் அதற்கேற்ப செலவுகளும் உண்டாகும். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து சென்றால் தேவையற்ற பிரச்சினைகளை தவிர்க்கலாம். தெய்வ வழிபாடு நல்லது.

துலாம்

இன்று உங்களுக்கு உடல் ஆரோக்கியத்தில் இருந்த மந்த நிலை நீங்கி சுறுசுறுப்புடன் இருப்பீர்கள். சுபகாரிய பேச்சுவார்த்தைகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் நல்ல மாற்றம் ஏற்படும். பூர்வீக சொத்துக்கள் வழியில் லாபங்கள் உண்டாகும். வங்கி சேமிப்பு உயரும்.

விருச்சிகம்

இன்று உங்களுக்கு பணப்புழக்கம் சற்று அதிகரிக்கும். வேலையில் இதுவரை இருந்த பிரச்சினைகள் நீங்கி நிம்மதி உண்டாகும். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் சேமிக்க முடியும். தொழிலில் சிறுசிறு மாறுதல்களை செய்து நல்ல லாபத்தை அடைவீர்கள். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். 

தனுசு

இன்று உங்களுக்கு பணவரவுகள் சிறப்பாக இருந்தாலும் அதற்கேற்ப செலவுகளும் அதிகரிக்கும். பிள்ளைகளால் சிறு மனக்கவலைகள் உண்டாகும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் கவனம் தேவை. நண்பர்கள் வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். எதிலும் சிக்கனமாக இருப்பது நல்லது.

மகரம்

இன்று நீங்கள் மனக்குழப்பத்துடன் காணப்படுவீர்கள். பிறரிடம் தேவையில்லாமல் கோபப்படும் சூழ்நிலை உருவாகும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் அமைதியாக இருப்பது நல்லது. வியாபாரத்தில் பணம் சம்மந்தமான கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் சற்று கவனம் தேவை.

கும்பம்

இன்று இல்லத்தில் தாராள தன வரவும், சுபிட்சமும் உண்டாகும். திருமண சுபமுயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். உடல்நிலை சீராகும். தர்ம காரியங்கள் செய்து மனமகிழ்ச்சி அடைவீர்கள். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும்.

மீனம்

இன்று நீங்கள் கடினமான காரியத்தை கூட எளிதில் செய்து முடிக்கும் துணிவோடு செயல்படுவீர்கள். சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். உற்றார் உறவினர் வருகையினால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். தொழில் சம்பந்தபட்ட வழக்கு விஷயங்களில் வெற்றி உண்டாகும்.


கணித்தவர்


ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001. 9383763001