நயன்தாரா நடிப்பில் கனெக்ட் பேய் படம் கடந்த வருடம் வெளியானது. தற்போது ஜெயம் ரவியுடன் இறைவன், இந்தியில் ஷாருக்கான் ஜோடியாக ஜவான் படங்களில் நடித்து வருகிறார், இந்த படங்கள் அடுத்தடுத்து திரைக்கு வர உள்ளன.

இந்தநிலையில் நயன்தாரா அவரது 75-வது படத்தில் நடிக்கிறார். இந்த படத்தை ஷங்கரின் உதவியாளர் நிலேஷ் கிருஷ்ணா டைரக்டு செய்கிறார். இதில் நயன்தாராவுடன் சத்யராஜ், ஜெய், கே.எஸ்.ரவிக்குமார், ரெடின் கிங்ஸ்லி, அச்சுதகு மார், சுரேஷ் சக்கரவர்த்தி, ரேணுகா, சச்சு, பூர்ணிமா ரவி ஆகிய 9 பிரபல நட்சத்திரங்கள் நடிக்க இருப்பதாக படக்குழுவினர் அறிவித்து உள்ளனர்.

இது சென்னை, திருச்சியில் நடக்கும் கதை என்றும் காதல் வழக்கமானதாக இல்லாமல் புதுமாதிரியாக படத்தில் இருக்கும் என்றும் டைரக்டர் நிலேஷ் கிருஷ்ணா தெரிவித்து உள்ளார். நயன்தாராவின் முந்தைய பல வெற்றி படங்களை புதுமுக டைரக்டர்கள் இயக்கி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.