Even though her father passed away, her daughter wrote the 10th class public examination


ராணிப்பேட்டை மாவட்டம் புளியங்கன்னு பிள்ளையார் கோவிலை சேர்ந்தவ தம்பதிகள் துளசி,அருணா. இவர்களுக்கு கிருத்திகா(15),வாசுகி (11) என்ற இரு மகள்களும்,அமர்நாத்(13) என்ற மகனும் உள்ளார். துளசி அப்பகுதியில் லாரி உரிமையாளராக உள்ளார்.துளசிக்கு தனது மூத்த மகள் கிருத்திகாவை வட்டாச்சியர் ஆக்க வேண்டும் என்பது லட்சியமாம்.

இதற்காக கிருத்திகாவை நவல்பூர் பகுதியிலுள்ள ஒரு மெட்ரிகுலேஷன் பள்ளியில் படிக்க வைத்து வந்துள்ளார். தற்சமயம் கிருத்திகாவிற்கு பத்தாம் வகுப்பு அரசுத் பொதுத் தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் இன்று காலை வழக்கம்போல் கிருத்திகா பொதுத்தேர்வு எழுத செல்வதற்காக பள்ளிக்கு கிளம்பி கொண்டிருந்தார்.

அப்போது காலையில் படுக்கையில் உறங்கிய நிலையில் இறந்து கிடந்துள்ளார். இதனை கண்ட அவரது தாயார் மற்றும் உறவினர்கள் கதறி அழுதுள்ளனர். இந்நிலையில் இத்தனை சோகமான சூழ்நிலையிலும் தனது தந்தையின் ஆசையான வட்டாச்சியர் ஆக வேண்டும் என்பதை நிறைவேற்றுவதற்காக தன்னுடைய பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை இன்று எழுத கனத்த இதயத்துடன் பள்ளிக்கு சென்று தேர்வு எழுதிவிட்டு பின்னர் வந்து தனது தந்தையின் இறுதி சடங்கில் கலந்துகொண்டு கதறி அழுதார்.

இச்சம்பவம் அப்பகுதியினரிடையே பெரும் சோகமான நேரத்திலும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.  தனது தந்தையின் ஆசைக்காக இந்த சிறு வயதிலும் மனதில் இருந்த கஷ்டங்களை மறைத்துகொண்டு அவருடைய மகள் பொதுத்தேர்வை எழுதச்சென்ற நிகழ்வு அப்பா-மகள் பாசப்பிணைப்பின் ஆகச்சிறந்த எடுத்துக்காட்டின் அடையாளமாய் திகழ்கிறது.