அதிக தூரம் நடப்பதாலும், நீரில் நின்று வேலை பார்ப்பதாலும், சத்துக்குறைபாட்டாலும் சிலருக்கு கால் பாதங்களில் வெடிப்பு உள்ளிட்ட பிரச்சனைகள் ஏற்படுவதுண்டு.
இதை தடுக்க வேப்பிலையில் மஞ்சள் சேர்த்து அரைத்து பூசினால் கால் வெடிப்பு குணமாகும். தினமும் சொரசொரப்பான கல்லில் காலை வைத்துத் தேய்த்தாலும், கால் வெடிப்பு மறையும்.
இரவில் கை பொறுக்கும் அளவு சூடான வெந்நீரில் எலுமிச்சைச்சாறு பிழிந்து அதில் கால்களை ஊறவைத்து, கால்களுக்கு தேய்க்கும் பிரஷ் அல்லது ப்யூமிக் ஸ்டோன் கொண்டு தேயுங்கள். பின் துடைத்துவிட்டு ஃபுட் க்ரீம் போட்டு மசாஜ் செய்யவும். கடுகு எண்ணெயை தினமும் கால், மற்றும் கைகளில் தேய்த்துக்கழுவி வந்தால் சொர சொரப்புத்தன்மை நீங்கி, மிருதுவாகும்.
மருதாணிப் பவுடருடன், டீத்தூள், தேங்காய் எண்ணெய் கலந்து தேய்த்துக்கொண்டால் கால்வெடிப்பு நீங்கி உடல் குளிர்ச்சியாய் இருக்கும். கற்றாழையில் இருக்கும் ஜெல் போன்ற திரவத்தை தினமும் இரண்டு முறை பூசி வந்தால் வெடிப்பு சரியாகிவிடும். வெங்காயத்தை அரைத்து கால் பாதங்களில் தடவி வந்தால் வெடிப்பு மறையும்.
கால் வெடிப்பு தோல் வறட்சியால் ஏற்படுகிறது. துணி துவைக்கும் போது சோப்பு நீரில் நிற்காமல் பார்த்துக்கொள்ளவும். காலுறைகளையும் அழுக்கின்றி அணியவும்.