Collector Valarmathi information on control of paddy harvesting vehicles in Ranipet district

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நெல் அறுவடை வாகனங்களை பொது சாலையில் ஓட்டிச்செல்லும் போது முன்புறம் உள்ள அறுவடை உருளையுடன் ஓட்டிச்செல்வதால் விபத்துக்கள் ஏற்படுகிறது. அதை அறுவடை முடிந்தபின் பின்பக்கம் பொருத்திய பின்புதான் பொது சாலையில் ஓட்டிச்செல்ல வேண்டும். மேலும், கலப்பை பொருத்திய டிராக்டர் வாகனத்தில் கலப்பை இடது, வலது புறங்களில் அசைந்து செல்லாமல் மெதுவாக ஓட்டிச் செல்ல வேண்டும். டிரெய்லர் வாகனத்தின் பின்புறம் கட்டாயம் சிவப்பு பிரதிபலிப்பான் ஒட்டிய பின்பே இயக்க வேண்டும்.

பொதுச்சாலையில் பொருட்களை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் பின்புறம், இடது, வலது புறங்களில் பொருட்கள் நீட்டிக் கொண்டும், மனித உயிருக்கு தீங்கு நேரிடும் வகையிலும் ஓட்டிச் செல்லக்கூடாது. சரக்கு வாகனங்களில் ஆட்களை ஏற்றிச் செல்லக்கூடாது. மேற்கண்ட விதிமுறைகளை தவறாமல் கடைபிடித்து, சாலையில் அனைவரும் பாதுகாப்புடன் செல்வதை உறுதிப்படுத்த வேண்டும். விதிமுறைகளை மீறுவோரின் வாகனம் பறிமுதல் செய்யப்படுவதுடன், உரிய அபராதம் விதிக்கப்படும்.

இந்த தகவலை மாவட்ட கலெக்டர் வளர்மதி தெரிவித் துள்ளார்.