The bus collided with the barricade in Ranipet, Mutthukadai
காஞ்சீபுரத்தில் இருந்து வேலூர் நோக்கி ஒரு தனியார் பஸ் எம்.பி.டி சாலையில் நேற்று மாலை வந்து கொண்டிருந்தது. இதனை ராஜேந்திரன் (வயது 42) என்பவர் ஓட்டி வந்தார். ராணிப்பேட்டை ஆட்டோ நகர் அருகே வரும்போது பஸ் திடீரென்று நிலை தடுமாறி சாலை நடுவில் இருந்த தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது.
பஸ் பாதி கவிழ்ந்த நிலையில் ஏற்பட்ட இந்த விபத்தில் 30-க்கும் மேற்பட்ட பயணிகள் அதிர்ஷ்டவசமாக காயம் இன்றி உயிர் தப்பினார்கள்.
இந்த விபத்தினால் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனையடுத்து ராணிப்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கிரேன் மற்றும் ஆட்கள் துணையோடு போக்குவரத்தை சரி செய்தனர். இதுகுறித்து ராணிப்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.