திருவள்ளூர்:கார், வேன் மோதிய விபத்தில் அரக்கோணத்தை சேர்ந்த மூவர் பலியாகினர்.
ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணத்தைச் சேர்ந்தவர்கள், அஸ்வின், 24, பாலாஜி, 25, மதன், 24, விஷ்ணு, 28, ேஹம்நாத், 29.
நண்பர்களான ஐந்து பேரும், மாருதி ஸ்விப்ட் காரில், சென்னை சென்றனர்.
நள்ளிரவில், அரக்கோணம் - தண்டலம் நெடுஞ்சாலையில், திருவள்ளூர் மாவட்டம் இருளஞ்சேரி பகுதியில் வந்தபோது, எதிரே இருங்காட்டுகோட்டையில் உள்ள தனியார் தொழிற்சாலையில் இருந்து தொழிலாளர்களுடன் வந்த மகேந்திரா வேன், கார் மீது மோதி, விபத்துக்குள்ளானது.
இதில் காரில் பயணம் செய்த அஸ்வின், பாலாஜி, மதன் ஆகிய மூவர், சம்பவ இடத்திலேயே பலியாயினர்.
மற்ற இருவர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்கள், சென்னை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். வேனில் வந்தவர்கள், லேசான காயங்களுடன் தப்பினர்.
தகவல் அறிந்த மப்பேடு போலீசார், விபத்தில் இறந்த மூவரின் உடல்களை கைப்பற்றி, திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரிக்கின்றனர்.