வாலாஜாபேட்டை அருகே, பைக் மீது டிப்பர் லாரி மோதி தீப்பற்றி எரிந்ததில், பைக்கில் சென்றவர் உடல் கருகி பலியானார்.
A tipper lorry hit the bike and caught fire, the rider of the bike was burnt to death
சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை அருகே சுமைதாங்கி என்ற பகுதியில், நேற்று காலை, 8:00 மணிக்கு ஜாவா பைக்கில், 25 வயது வாலிபர் ஒருவர் சென்றார். அப்போது சென்னையிலிருந்து மணல் ஏற்றி வர, பெருமுகை குவாரிக்கு சென்ற டிப்பர் லாரி பைக் மீது மோதியது. இதில் பைக்குடன் வாலிபர், டிப்பர் லாரி அடியில் சிக்கிக்கொண்டார்.
அப்போது, லாரியின் பெட்ரோல் டேங்க் மீது பைக் இடித்ததில், டேங்க் உடைந்து பெட்ரோல் கசிந்து தீ பிடித்தது. இதில் லாரியுடன் சேர்த்து பைக்கும் எரிந்தது. லாரியின் அடியில் சிக்கிய வாலிபர் தீயில் கருகி பலியானார். ராணிப்பேட்டை தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். இறந்த வாலிபர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என தெரியாத அளவுக்கு அவர் உடல் கருகி கிடந்தது. காவேரிப்பாக்கம் போலீசார், தப்பியோடிய டிப்பர் லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.