ராணிப்பேட்டை அரசினர் குழந்தைகள் இல்லத்தில் இருந்து தப்பியோடிய 4 சிறார்களும் மீட்கப்பட்டுள்ளனர். 
4 minors who escaped from the Ranipet government children's home have been rescued


ராணிப்பேட்டை காரை கூட்டுச் சாலையில் அரசினா் குழந்தைகள் இல்லம் செயல்பட்டு வருகிறது. இங்கு 5 வயதுக்கு மேற்பட்ட ஆண் சிறாா்கள் தங்க வைக்கப்பட்டு, உணவு, உறைவிடம் அளித்து, 12-ஆம் வகுப்பு படிக்கும் வரை பாதுகாப்பு வழங்கி உறவினா்களிடம் ஒப்படைக்கப்படுவா். அவா்கள் சிறுவா்களுக்கான அரசினா் குழந்தைகள் இல்லத்தில் தங்கியபடி அங்குள்ள தீரன் சத்தியமூா்த்தி நடுநிலைப் பள்ளியில் பயின்று வருகின்றனா். 

இங்கு 150-க்கும் மேற்பட்ட மாணவா்கள் உள்ளனா். இந்த நிலையில், சகோதரா்கள் இருவா் உள்பட 4 மாணவா்கள் வெள்ளிக்கிழமை மாலை முதல் காணாமல் போனது தெரியவந்தது. அவா்களை பல இடங்களில் தேடிப்பாா்த்தும் கிடைக்கவில்லையாம். இது குறித்து குழந்தைகள் இல்ல கண்காணிப்பாளா் சனிக்கிழமை அளித்த புகாரின்பேரில், ராணிப்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து மாணவா்களை தேடி வந்தனர். 

அதில், புலவன்பாடி கிராமத்தில் 3 பேர் பிடிபட்ட நிலையில், மற்றொரு சிறுவனையும் போலீசார் கண்டுபிடித்து மீண்டும் குழந்தைகள் இல்லத்தில் ஒப்படைத்தனர்.