4 children who were in the Ranipet government children's home are missing


ராணிப்பேட்டை மாவட்டம் காரை கூட்ரோடு பகுதியில் சமூகநலத்துறை கட்டுப்பாட்டின் கீழ் சிறுவர்களுக்கான அரசினர் குழந்தைகள் இல்லம் செயல்பட்டு வருகிறது. இங்கு ஏராளமான சிறுவர்கள் தங்கி கல்வி பயின்று வருகின்றனர்.

இந்த இல்லத்தில் இருந்த 4 சிறுவர்கள் நேற்றைய தினம் மழை பெய்த போது, துணிகளை எடுப்பதற்காக வெளியே வந்துள்ளனர். அவ்வாறு வெளியே வந்தவர்கள் மீண்டும் இல்ல வளாகத்திற்குள் திரும்பவில்லை என கூறப்படுகிறது. தற்போது வரை அவர்கள் எங்கு தேடியும் கிடைக்காததால், இது குறித்து ராணிப்பேட்டை காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 

இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய சிறுவர்களை தேடி வருகின்றனர்.