அமாவாசை மற்றும் பௌர்ணமி பிறகு மூன்றாவது திதியாக வருவது திருதியை திதி சித்திரை மாதம் அமாவாசைக்குப் பிறகு வளர்பிறையில் வரும் திருதியை திதியை 'அட்சய திருதியை' என்கிறோம். 

இந்த ஆண்டு அட்சய திருதியை, சித்திரை மாதம் 10-ந் தேதி (23.4.2023) ஞாயிற்றுக்கிழமை அன்று வருகின்றது. வசதியுள்ளவர்கள் அட்சய திருதியை அன்று நல்ல நேரம் பார்த்து விலை உயர்ந்த ஆபரணங்களை வாங்க முன்வருவர். வசதி இல்லாதவர்கள், சிறிய அளவில் ஏதேனும் மங்கலப் பொருட்களில் ஒன்றை வாங்கலாம்.

அட்சய திருதியை நாளில் பொன், பொருட்கள், ஆடை, ஆபரணங்கள் மட்டுமன்றி, மற்ற மங்கலப் பொருட்கள் வாங்கினாலும் வீட்டில் நல்லது நடக்கும். வளர்ச்சி அதிகரிக்கும். குறிப்பாக உப்பு, தெய்வப்படங் கள், தானியங்கள், சோறு வடிக்கும் பாத்திரம், மஞ்சள் வண்ண ஆடைகள், பணப்பெட்டி, சங்கு, பூஜையறை யில் உபயோகப்படுத்தும் புனிதமான பொருட்கள். எழுதுகோல், லட்சுமி படம், அடுப்பு, கனி வகைகள், சர்க்கரை, நெல்லிக்காய், மஞ்சள்தூள், குங்குமம் போன்றவற்றை அவரவர் வசதிக்கேற்ப வாங்கி வந்து வீட்டில் வைக்கலாம். அட்சய திருதியை அன்று அதி காலையிலும், மாலையிலும் கிருஷ்ணர் வழிபாட்டை மேற்கொண்டால் கேட்ட வரம் கிடைக்கும்.