குறள் : 1083

பண்டறியேன் கூற்றென் பதனை இனியறிந்தேன்

பெண்டகையால் பேரமர்க் கட்டு.


மு.வ உரை :

எமன் என்று சொல்லப்படுவதை முன்பு அறியேன் இப்பொழுது கண்டறிந்தேன் அது பெண் தனமையுடன் போர் செய்யும் பெரிய கண்களை உடையது


கலைஞர் உரை :

கூற்றுவன் எனப்படும் பொல்லாத எமனை, எனக்கு முன்பெல்லாம் தெரியாது; இப்போது தெரிந்து கொண்டேன் அந்த எமன் என்பவன் பெண்ணுருவத்தில் வந்து போர் தொடுக்கக்கூடிய விழியம்புகளை உடையவன் என்ற உண்மையை


சாலமன் பாப்பையா உரை :

எமன் என்று நூலோர் சொல்ல முன்பு கேட்டிருக்கிறேன்; பார்த்தது இல்லை; இப்போது தெரிந்து கொண்டேன். பெண்ணிற்கே உரிய நல்ல குணங்களுடன் பெரிதாய்ப் போரிடும் கண்களையும் உடையது தான் எமன்.


Kural 1083

Pantariyen Kootren Padhanai Iniyarindhen

Pentakaiyaal Peramark Kattu


Explanation :

I never knew before what is called Yama; I see it now; it is the eyes that carry on a great fight with (the help of) female qualities.



Horoscope Today: Astrological prediction for April 16, 2023


இன்றைய ராசிப்பலன் - 16.04.2023 | Indraya Nalla Neram | Indraya Panchangam

மேஷ ராசி

நண்பர்களால் உதவி கிடைக்கும். பயணங்கள் நல்ல பலன்களைத் தரும். வேலையில்லாமல் இருப்பவர்களுக்கு புதிய வேலை கிடைக்க அதிக வாய்ப்பு உள்ளது. பணவரவு அதிகரிக்கும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படும்.


ரிஷப ராசி


பொறுமையாக இருப்பது நல்லது. செலவுகள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் பணத்தைக் கவனமாகக் கையாள வேண்டும். வேலை குறித்த விஷயங்களைப் பாதுகாப்பது நல்லது. வீட்டில் மகிழ்ச்சி உண்டாகும். திருமண பாக்கியம் உள்ளது. வியாபாரத்தில் முன்னேற்றம் கிடைக்கும்.


மிதுன ராசி


உழைப்பு நல்ல பலனைத் தரும். உங்களைத் தேடி மரியாதை வரும். வீட்டில் மகிழ்ச்சி உண்டாகும். தொழிலை முன்னேற்றுவதற்குக் கடினமாக உழைப்பீர்கள். சிறு வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். வீடு, மனை வாங்க அதிக வாய்ப்பு உள்ளது.


கடக ராசி


சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. தொழில் சம்பந்தப்பட்ட சிக்கல்களை நிவர்த்தி செய்வது நல்லது. தேவையில்லாமல் பேச வேண்டாம். வியாபாரத்தில் மந்த நிலை நிலவும். குடும்பத்தினரால் சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. கடன் சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.


சிம்ம ராசி


சேமிப்பு அதிகரிக்கும், குடும்பத்தோடு மகிழ்ச்சியாக இருக்க வாய்ப்புள்ளது. ரியல் எஸ்டேட் தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சி உண்டாகும். பெற்றோர்களால் உதவி கிடைக்கும்.


கன்னி ராசி


வியாபாரம் சற்று மந்தமாக இருக்கும். தொழில் சம்பந்தப்பட்ட விஷயங்களில் எதிர்ப்புகள் இருக்க அதிக வாய்ப்பு உள்ளது. பயணங்களால் பலன் கிடைக்காது. பேசும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். கவனமாக இருப்பது நல்லது.

துலாம் ராசி


வீட்டில் மங்கள காரியங்கள் நிகழ வாய்ப்பு உள்ளது. திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கும். காதலித்த பெண்ணை திருமணம் செய்ய அதிக வாய்ப்புள்ளது. ஆடம்பர செலவு அதிகரிக்க வாய்ப்புள்ளது. புதிதாக வாகனம் வாங்க அதிக வாய்ப்பு உள்ளது.


விருச்சிக ராசி


கடினமான உழைப்பு நல்ல பலன்களைத் தரும். தேவையான நேரத்தில் உதவிகள் கிடைக்கும். வியாபாரம் குறை இல்லாமல் செல்லும். பயணங்களால் இந்த பலன்களும் இருக்காது, தேவையில்லாத அலைச்சல்கள் அதிகரிக்கும். குடும்பத்தில் சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.


தனுசு ராசி


தொழில் சார்ந்த விஷயங்கள் மந்தமாக இருக்கும். விருப்பங்கள் கைகூடும், தேவையில்லாத பொறுப்புகள் உங்களைத் தேடி வரும். வியாபாரத்தில் பெரிய முன்னேற்றம் இருக்காது. குடும்பத்தில் மங்கள காரியம் நடக்க உள்ளது.


மகர ராசி


உடன்பிறந்தவர்களால் கிடைக்கவிருந்த உதவிகள் தாமதமாகலாம். ரியல் எஸ்டேட் தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். பெண்களுக்கு நகைகள் மீது ஆசை அதிகமாகும். உடல் நலத்தில் கவனம் தேவை. தொழில் சார்ந்த விஷயங்களில் செலவு அதிகரிக்கும்.


கும்ப ராசி


கணவன் மனைவிக்கிடையே அன்பு பரிமாற்றம் அதிகரிக்கும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். அலுவலக பணியில் இருப்பவர்களுக்கு மகிழ்ச்சி உண்டாகும். எதிர்பார்த்த தகவல்கள் உங்களைத் தேடி வரும். தொழில் சார்ந்த விஷயங்களில் வருமானம் அதிகரிக்கும்.


மீன ராசி


மற்றவர்களுக்கு உதவி செய்வதால் உங்களது செல்வாக்கு அதிகரிக்கும். படித்துப் பார்த்துவிட்டு கையெழுத்துப் போடுங்கள். சிந்தித்துச் செயல்படுங்கள் இல்லையென்றால் நல்ல உறவும் பிரிந்துவிடும். திருமண யோகம் உள்ளது. பணவரவு உங்களுக்கு ஏற்றவாறு இருக்கும்.