வாலாஜா நகராட்சி சார்பில் உலக வன நாள் நிகழ்ச்சி கொண்டாடப்பட்டது.
நிகழ்ச்சியில் திருத்தணி தெத்து தெருவில் பூண்டி மகான் ஆசிரம குளம் மற்றும் காந்திநகர் பகுதியில் உள்ள நல்ல தண்ணீர் குளம், புதிய தாலுகா அலுவலகம் ஆகிய இடங்களில் மரக்கன்றுகள் நடப்பட்டன.
நிகழ்ச்சிக்கு நகராட்சி தலைவர் ஹரிணி தில்லை தலைமை தாங்கினார். ஆய்வாளர் ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தார். களப்பணி உதவியாளர் மகேந்திரன் வரவேற்றார். தூய்மை பணி மேற் பார்வையாளர்கள் ஆறுமுகம், விநாயகம், தாவூத் மற்றும் நகராட்சி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.