உலக நாடுகளை அச்சுறுத்தும் நிலநடுக்கம் – தமிழக மக்களே உஷார்.. மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை!

கடந்த ஒரு மாத காலமாக துருக்கி, சிரியா, இந்தோனீசியா உள்ளிட்ட பல நாடுகளில் தொடர்ந்து நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் வேலூர் மாவட்ட ஆட்சியர் மக்களுக்கு முக்கிய எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

நிலநடுக்கம்:

துருக்கி மற்றும் சிரியாவில் கடந்த பிப். 6 தேதி பயங்கரமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் கட்டிட இடிபாடுகளில் சிக்கி ஏராளமான மக்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். துருக்கியை தொடர்ந்து இந்தோனேசியா, ஆப்கான், பப்புவா நியூ கினியா ஆகிய நாடுகளில் நிலநடுக்கம் ஏற்பட்டது. திடீரென ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மக்கள் அச்சமடைந்த வீடுகளில் இருந்து வெளியேறி சாலைகளுக்கு வந்தனர்.

மற்ற நாடுகளை தொடர்ந்து இந்தியாவிலும் சில பகுதிகளில் நிலநடுக்கம் உணரப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தின் வேலூர் மாவட்டத்தில் உள்ள சிலப்பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது என்று மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார். இன்று அம்மாவட்டத்தில் நடைபெற்ற தடுப்பூசி முகாமில் பங்கேற்ற அவர் ஏற்கனவே நிலநடுக்கம் வந்த பகுதிகளில் நில அதிர்வு மீண்டும் வரலாம் என கணிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மத்திய அரசு கடிதம் அனுப்பியுள்ளது என்று தெரிவித்துள்ளார். அதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நிலநடுக்கம் ஏற்பட கூடிய பகுதிகளில் வாழும் மக்களுக்கு வேறு இடங்களில் வீடுகள் கட்டித்தர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றும் கூறியுள்ளார்.