ராணிப்பேட்டை மாவட்டம் ஓச்சேரியை அடுத்த அவளூர்- வேலூர் சென்னை தேசிய நெடுஞ்சாலையின் அருகே அடையாளம் தெரியாத 60 வயது மதிக்கத்தக்க முதியவர் இறந்து கிடப்பதாக அவளூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வாலாஜா அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் வேல்முருகன் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.