👉 1845ஆம் ஆண்டு மார்ச் 17ஆம் தேதி ரப்பர் பேண்ட், ஸ்டீபன் பெர்ரி (Stephen Perry) என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது.


👉 1919ஆம் ஆண்டு மார்ச் 17ஆம் தேதி ரௌலட் சட்டத்தை எதிர்த்து பிரச்சாரம் செய்ய மகாத்மா காந்தி சென்னை வந்தார்.

👉 1950ஆம் ஆண்டு மார்ச் 17ஆம் தேதி கலிபோர்னியா பல்கலைக்கழக ஆய்வாளர்கள் கலிபோர்னியம் என்ற 98வது தனிமம் கண்டுபிடிக்கப்பட்டது.


பிறந்த நாள் :-


கல்பனா சாவ்லா

🚀 இந்தியாவின் முதல் விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லா 1962ஆம் ஆண்டு மார்ச் 17ஆம் தேதி ஹரியானா மாநிலத்தில் உள்ள கர்னால் என்ற நகரத்தில் பிறந்தார். இவருடைய பள்ளி சான்றிதழ்களில் 1961ஆம் ஆண்டு, ஜூலை 1ஆம் தேதி பிறந்தார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

🚀 இவர் 1997ஆம் ஆண்டு கொலம்பிய விண்கலம் எஸ்.டி.எஸ்-87ல் ஆறு வீரர்கள் கொண்ட குழுவுடன் முதல்முறையாக விண்வெளிக்கு சென்றார். இந்த விண்கலம் விண்வெளியில் 372 மணிநேரம் ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு 252 தடவை பூமியைச் சுற்றியது.

🚀 மீண்டும் 2003ஆம் ஆண்டு கொலம்பியா விண்கலம் எஸ்.டி.எஸ்-107ல் கல்பனா உள்ளிட்ட ஏழு வீரர்கள் அடங்கிய குழு சென்றனர். பிப்ரவரி 1ஆம் தேதி, பயணம் முடித்து விண்கலம் தரையிறங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னதாக, விண்கலம் வெடித்துச் சிதறியது. இதில் கல்பனா உட்பட ஏழு பேரும் உயிரிழந்தனர்.

🚀 வானத்தை வசப்படுத்திய கல்பனா சாவ்லாவை கௌரவிக்கும் விதமாக கர்நாடக அரசும், இந்திய அரசும் சாதனை புரியும் பெண்களுக்கு இவரது பெயரில் விருது வழங்கி வருகிறது.


சாய்னா நேவால்

🎾 ஒலிம்பிக் பேட்மிண்டன் போட்டியில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனையான சாய்னா நேவால் 1990ஆம் ஆண்டு மார்ச் 17ஆம் தேதி ஹரியானாவில் பிறந்தார். இவர் 2012ஆம் ஆண்டு லண்டனில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்தார். மேலும் பல்வேறு பதக்கங்களையும் வென்றிருக்கிறார்.

🎾 இவர் 2015ஆம் ஆண்டு உலக அளவில் பேட்மிண்டன் தரவரிசையில், பெண்கள் ஒற்றையர் பிரிவில் முதலிடத்தை பெற்றார்.

🎾 மேலும் இந்தியாவின் உயரிய விருதுகளான பத்மஸ்ரீ, அர்ஜுனா, ராஜீவ் காந்தி கேல் ரத்னா உள்ளிட்ட பல விருதுகளையும் பெற்றுள்ளார். உலக பேட்மிண்டன் போட்டியில் நிறைய சாதனைகளை படைத்துள்ளார்.


வால்டர் ருடால்ஃப் ஹெஸ்

💉 மருத்துவத்திற்கான நோபல் பரிசை வென்ற வால்டர் ருடால்ஃப் ஹெஸ் (Walter Rudolf Hess) 1881ஆம் ஆண்டு மார்ச் 17ஆம் தேதி சுவிட்சர்லாந்தில் பிறந்தார்.

💉 இவர் 1906ஆம் ஆண்டு மருத்துவத்தில் பட்டம் பெற்ற பிறகு, அறுவைசிகிச்சை நிபுணராகப் பயிற்சி பெற்றார். ரத்தத்தின் பிசுபிசுப்புத் தன்மையை அளப்பதற்காக விஸ்கோசிமீட்டர் என்ற கருவியை உருவாக்கினார்.

💉 மேலும், இவர் விழி விலகலின் அளவுகளைக் கண்டறிய உதவும் ஹெஸ் திரையை உருவாக்கினார். 1912ஆம் ஆண்டு கண் மருத்துவர் பணியை விட்டுவிட்டு ஜஸ்டஸ் காலே என்ற விஞ்ஞானியுடன் இணைந்து உடலியல் ஆராய்ச்சிகளில் ஈடுபட்டார்.

💉 இவர் 1930களின் ஆரம்பத்தில் உள்ளுறுப்புகளை கட்டுப்படுத்தும் நடுமூளைப் பகுதியின் செயல்பாடு குறித்து பூனைகளைப் பயன்படுத்தி ஆராயத் தொடங்கினார். அது நியூரோ செக்ரியேஷன் (நரம்பு மண்டல கசிவுகள்) குறித்தப் புரிதல்களுக்கான முக்கிய கண்டுபிடிப்பாக திகழ்ந்தது.

💉 இந்த கண்டுபிடிப்புக்காக இவர் 1949ஆம் ஆண்டு எகாஸ் மோனிஸ் என்பவருடன் இணைந்து மருத்துவம் மற்றும் உடலியலுக்கான நோபல் பரிசை வென்றார். உடலியல் குறித்த ஆராய்ச்சிகளை மேற்கொண்டு அந்த துறைக்கு மகத்தான பங்களிப்பை வழங்கிய வால்டர் ருடால்ஃப் ஹெஸ் தனது 92வது வயதில் (1973) மறைந்தார்.


இன்றைய தின நிகழ்வுகள்


கிமு 45 – தனது கடைசி வெற்றியில் யூலியசு சீசர் முண்டா நகர சமரில் டைட்டசு லபீனசின் பொம்பெய் படைகளை வென்றான்.

180 – மார்க்கசு ஆரேலியசு இறந்ததை அடுத்து அவரது மகன் கொம்மோடசு தனது 18-வது அகவையில் உரோமைப் பேரரசரானார்.[1]

455 – பெத்ரோனியசு மாக்சிமசு மேற்கு உரோமைப் பேரரசராக முடி சூடினார்.

1776 – அமெரிக்கப் புரட்சி: பிரித்தானியப் படைகள் மசாசுசெட்சின் பாஸ்டன் நகர முற்றுகையை முடித்து வெளியேறினர்.

1805 – நெப்போலியன் தலைவனாக இருந்த இத்தாலியக் குடியரசு, இத்தாலியப் பேரரசு ஆனது. நெப்போலியன் அதன் பேரரசன் ஆனான்.

1824 – இலண்டனில் இடம்பெற்ற ஆங்கிலோ-இடச்சு உடன்பாட்டை அடுத்து மலாய் தீவுக் கூட்டம் இரண்டாகப் பிரிக்கப்பட்டது. மலாய் தீபகற்பம் பிரித்தானியரின் கீழும், சுமாத்திரா, சாவகம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள் இடச்சின் கீழும் வநதன.

1845 – இரப்பர் பட்டி கண்டுபிடிக்கப்பட்டது.

1861 – இத்தாலி இராச்சியம் உருவானது.

1891 – பிரித்தானியாவின் யூட்டோப்பியா என்ற கப்பல் ஆன்சன் என்ற ஆத்திரேலியக் கப்பலுடன் கிப்ரால்ட்டர் கரையில் மூழ்கியதில் 562 பேர் உயிரிழந்தனர்.

1919 – றோவ்லட் சட்டத்தை எதிர்த்துப் பிரச்சாரம் செய்வதற்காக மகாத்மா காந்தி சென்னை வந்தார்.

1939 – இரண்டாம் சீன-சப்பானியப் போர்: குவோமின்டாங், சப்பான் இரண்டுக்கும் இடையே நான்சாங் சமர் இடம்பெற்றது.

1941 – வாசிங்டன் தேசிய கலைக்காட்சியகம் அரசுத்தலைவர் பிராங்க்ளின் ரூசவெல்ட்டினால் திறந்து வைக்கப்பட்டது.

1942 – பெரும் இன அழிப்பு: மேற்கு உக்ரேனின் லிவிவ் என்ற இடத்தைச் சேர்ந்த யூதர்கள் கிழக்கு போலந்தில் பெல்செக் என்ற இடத்தில் வைத்து நாட்சி செருமனியரினால் நச்சு வாயு செலுத்தப்பட்டுக் கொல்லப்பட்டனர்.

1948 – பெல்ஜியம், பிரான்சு, லக்சம்பர்க், நெதர்லாந்து, ஐக்கிய இராச்சியம் ஆகிய நாடுகள் பிரசெல்சு உடன்பட்டில் கையெழுத்திட்டன.

1950 – கலிபோர்னியா பல்கலைக்கழக ஆய்வாளர்கள் “கலிபோர்னியம்” என்ற 98-வது தனிமத்தைக் கண்டுபிடித்ததாக அறிவித்தனர்.

1957 – பிலிப்பீன்சு, சேபு என்ற இடத்தில் வானூர்தி ஒன்று விபத்துக்குள்ளாகியதில், பிலிப்பீன்சு அரசுத்தலைவர் ரமோன் மக்சேசே உட்பட 24 பேர் உயிரிழந்தனர்.

1958 – ஐக்கிய அமெரிக்கா வங்கார்ட் 1 செயற்கைக்கோளை ஏவியது.

1959 – 14வது தலாய் லாமா டென்சின் கியாட்சோ, திபெத்தில் இருந்து வெளியேறி இந்தியா வந்து சேர்ந்தார்.

1960 – அமெரிக்க அரசுத்தலைவர் டுவைட் டி. ஐசனாவர் கியூபாவுக்கு எதிரான மறைமுகத் தாக்குதலுக்கான தேசிய பாதுகாப்பு சபையின் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தார். இது பன்றிகள் விரிகுடா படையெடுப்புக்கு வழிவகுத்தது.

1963 – பாலித் தீவில் ஆகூங்கு எரிமலை வெடித்ததில் 1,100 பேர் உயிரிழந்தனர்.

1966 – காணாமல் போன ஐக்கிய அமெரிக்காவின் ஐதரசன் குண்டை ஆல்வின் என்ற நீர்மூழ்கிக் கப்பல் மத்திய தரைக் கடல்பகுதியில் எசுப்பானியாவுக்கு அருகில் கண்டுபிடித்தது.

1968 – அமெரிக்காவின் ஊட்டா மாநிலத்தில் நரம்பு வாயுவை சோதித்ததில் 6,000 இற்கும் அதிகமான ஆடுகள் இறந்தன.

1970 – மை லாய் படுகொலைகள் தொடர்பான தகவல்களை வெளியிடாமல் மறைத்த குற்றத்துக்காக அமெரிக்க இராணுவம் 14 இராணுவ அதிகாரிகள் மீது குற்றம் சாட்டியது.

1988 – கொலம்பியாவின் போயிங் விமானம் ஒன்று வெனிசுவேலாவின் எல்லையில் உள்ள மலை ஒன்றில் மோதியதில் 143 பேர் உயிரிழந்தனர்.

1988 – எரித்திரியாவில் எரித்திரிய மக்கள் விடுதலை முன்னணியினர் எதியோப்பிய இராணுவ நிலைகளை நோக்கி மும்முனைத் தாக்குதலை ஆரம்பித்தனர்.

1992 – ஆர்ஜெண்டீனாவில் இசுரேல் தூதரகத்தில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுவெடிப்பில் 29 பேர் கொல்லப்பட்டு 242 பேர் படுகாயமடைந்தனர்.

1992 – தென்னாப்பிரிக்காவில் இனவொதுக்கலை முடிவுக்குக் கொண்டுவர நடத்தப்பட்ட பொது வாக்கெடுப்பில் 68.7% மக்கள் ஆதரவாக வாக்களித்தனர்.

1996 – இலங்கை அணி ஆத்திரேலியாவைத் தோற்கடித்து துடுப்பாட்ட உலகக் கிண்ணத்தை வென்றது.

2000 – உகாண்டாவில் கடவுளின் பத்துக் கட்டளைகளை மேம்படுத்தும் மத இயக்கம் ஒன்றின் உறுப்பினர்கள் 800 பேர் வரையில் அவ்வியக்கத் தலைவர்களினால் படுகொலை செய்யப்பட்டனர்.

2004 – கொசோவோவில் இடம்பெற்ற வன்முறைகளில் 22 பேர் உயிரிழந்து, 200 பேர் காயமடைந்தனர். செர்பியாவில் 35 தேவாலயங்கள், இரண்டு பள்ளிவாசல்கள் சேதமாக்கப்பட்டன.

இன்றைய தின பிறப்புகள்


1834 – காட்லீப் டைம்லர், செருமானிய பொறியியலாளர், தொழிலதிபர் (இ. 1900)

1919 – நாட் கிங் கோல், அமெரிக்கப் பாடகர் (இ. 1965)

1920 – சேக் முஜிபுர் ரகுமான், வங்காள தேசத்தின் 1வது அரசுத்தலைவர் ரி. 1975)

1926 – சீக்பிரீட் லென்சு, போலந்து-செருமனிய எழுத்தாளர் (இ. 2014)

1926 – கே. சங்கர், தென்னிந்தியத் திரைப்பட இயக்குநர், திரைப்படத் தொகுப்பாளர் (இ. 2006)

1939 – பங்காரு லட்சுமண், இந்திய அரசியல்வாதி (இ. 2014)

1940 – காட்பிரீடு மூன்சென்பெர்கு, செருமானிய இயற்பியலாளர்

1940 – எம். எச். எம். ஷம்ஸ், இலங்கை ஊடகவியலாளர், கவிஞர், எழுத்தாளர் (இ. 2002)

1955 – சிந்தியா மெக்கினி, அமெரிக்க அரசியல்வாதி

1964 – ராப் லோ, அமெரிக்க நடிகர்

1975 – புனீத் ராச்குமார், இந்திய நடுகர், பாடகர்

1990 – சாய்னா நேவால், இந்திய இறகுப்பந்தாட்ட வீராங்கனை

இன்றைய தின இறப்புகள்


1406 – இப்னு கல்தூன், துனீசிய சமூகவியலாளர், வரலாற்றாளர் (பி. 1332)

1527 – ராணா சங்கா, இந்திய ஆட்சியாளர் (பி. 1482)

1764 – ஜார்ச் பார்க்கர்ராங்கிலேய வானியலாளர், அரசியல்வாதி (பி. 1695)

1782 – டேனியல் பெர்னூலி, டச்சு-சுவிட்சர்லாந்து கணிதவியலாளர், இயற்பியலாளர் (பி. 1700)

1846 – பிரீட்ரிக் வில்கெல்ம் பெசல், செருமானிய வானியலாளர், கணிதவியலாளர், இயற்பியலாளர் (பி. 1784)

1849 – இரண்டாம் வில்லியம், இடச்சு மன்னர் (பி. 1792)

1853 – கிறிஸ்டியன் டாப்ளர், ஆத்திரிய இயற்பியலாளர், கணிதவியலாளர் (பி. 1803)

1956 – ஐரீன் ஜோலியட் கியூரி, நோபல் பரிசு பெற்ற பிரான்சிய வேதியியலாளர் (பி. 1897)

1957 – ரமோன் மக்சேசே, பிலிப்பீன்சின் 7வது அரசுத்தலைவர் (பி. 1907)

1993 – டானியல் அன்ரனி, ஈழத்து சிறுகதை எழுத்தாளர் (பி. 1947)

2011 – கியார்கிய் ஏ.கிராசின்சுகி, உருசிய வானியலாளர் (பி. 1939)

2014 – மெர்சி எதிரிசிங்க, இலங்கை சிங்கள நடிகை, பாடகி (பி. 1945)

2017 – டெரெக் வால்காட், நோபல் பரிசு பெற்ற செயின்ட் லூசியா எழுத்தாளர் (பி. 1930)

இன்றைய தின சிறப்பு நாள்


குழந்தைகள் நாள், (வங்காளதேசம்)

தேசிய முவாய் போர நாள் (தாய்லாந்து)

புனித பேட்ரிக்கின் நாள் (அயர்லாந்து, மற்றும் ஆங்கிலம் பேசும் நாடுகள்)