👉 1913ஆம் ஆண்டு மார்ச் 12ஆம் தேதி இந்திய அரசின் ஐந்தாவது துணை பிரதமரான யஷ்வந்தராவ் பல்வந்தராவ் சவாண் (Yashwantrao Balwantrao Chavan) மும்பையில் பிறந்தார்.
👉 1954ஆம் ஆண்டு மார்ச் 12ஆம் தேதி சாகித்ய அகாடமி, இந்திய அரசினால் தொடங்கப்பட்டது.
பிறந்த நாள் :-
🌷 புகழ்பெற்ற ஆளுமை வளர்ச்சி ஆசான் ஏர்ல் நைட்டிங்கேல் 1921ஆம் ஆண்டு மார்ச் 12ஆம் தேதி அமெரிக்காவிலுள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பிறந்தார்.
🌷 பேர்ல் ஹார்பர் (Pearl Harbor) போர் முடிந்த பிறகு வானொலியில் வேலை பார்க்கத் தொடங்கினார். 1949ஆம் ஆண்டு நெப்போலியன் ஹில் எழுதிய திங்க் அன்ட் க்ரோ ரிச் புத்தகத்தைப் படிக்க நேர்ந்து, அதனால் கவரப்பட்டார். 1956ஆம் ஆண்டு தி ஸ்ட்ரேஞ்ஜஸ்ட் சீக்ரட் என்ற ஒரு ஒலித்தட்டை உருவாக்கினார்.
🌷 'திங்க் அன்ட் க்ரோ ரிச்: தி எசன்ஸ் ஆஃப் இம்மார்ட்டல் புக் பை நெப்போலியன் ஹில், நேரேட்டட் பை ஏர்ல் நைட்டிங்கேல்' என்ற தலைப்பில் ஒலிப்பதிவு செய்யப்பட்ட இது முதன்முதலாக கோல்ட் ரெகார்ட் தரத்தை அடைந்தது.
🌷 1960ஆம் ஆண்டு லியோட் கனன்ட் என்பவருடன் இணைந்து நைட்டிங்கேல் கனன்ட் (Nightingale-Conant) கார்ப்பரேஷனை நிறுவினார். 1976ஆம் ஆண்டு டோஸ்ட்மாஸ்டர்ஸ் இன்டர்நேஷனல் அமைப்பு இவருக்கு கோல்டன் கேவல் விருது வழங்கியது.
🌷 1980ஆம் ஆண்டுகளின் மத்தியில் ஏர்ல் நைட்டிங்கேல்ஸ் கிரேட்டஸ்ட் டிஸ்கவரி என்ற தனது முதல் புத்தகத்தை எழுதினார். இதற்கு இவருக்கு இலக்கிய சேவைக்கான நெப்போலியன் ஹில் கோல்டு மெடல் வழங்கப்பட்டது.
🌷 ஏராளமான மக்களின் வாழ்க்கையில் பெரும் மாற்றங்களைக் கொண்டு வந்த சாதனையாளரான இவர், 1989ஆம் ஆண்டு தனது 68வது வயதில் மறைந்தார்.
🌹 மின் சர்க்யூட், நிறப்பிரிகை, வெப்பக் கதிர்வீச்சு தொடர்பான விதிகளை வெளியிட்ட குஸ்டவ் ராபர்ட் கிர்க்காஃப் 1824ஆம் ஆண்டு மார்ச் 12ஆம் தேதி கிழக்கு பிரஷ்யாவின் கோனிஸ்பர்க் நகரில் பிறந்தார்.
🌹 கல்லூரியில் பயின்றபோதே, மின்னோட்டம் குறித்த முக்கிய ஆராய்ச்சிகளை மேற்கொண்டார். உலகப் புகழ்பெற்ற கிர்க்காஃப் மின்சுற்று விதிகளை 21வது வயதில் வெளியிட்டார்.
🌹 ஜெர்மனி வேதியியலாளர் ராபர்ட் புன்சனுடன் இணைந்து 1854ஆம் ஆண்டு சீசியம், ருபீடியம் ஆகிய தனிமங்களைக் கண்டறிந்தார். மின்கடத்தி மூலம் ஒளியின் வேகத்தில் மின்சாரம் பாய்கிறது என்பதை 1857ஆம் ஆண்டு முதன்முதலாக கண்டறிந்து கூறினார்.
🌹 இவர் 1859ஆம் ஆண்டு வெப்பக் கதிர்வீச்சு விதிகளை வெளியிட்டார். மேலும் 1862ஆம் ஆண்டு 'கரும்பொருள் கதிர்வீச்சு' பற்றிய ஆய்வின் முடிவுகளை வெளியிட்டார்.
🌹 ராபர்ட் புன்செனுடன் இணைந்து சூரிய நிறமாலைகள் குறித்த ஆய்வுகளுக்காக 'ரூம்ஃபோர்டு' பதக்கம் பெற்றார். பல்வேறு துறைகளில் இவரது கண்டுபிடிப்புகளுக்காக டேவி பதக்கம், ஜன்சென் பதக்கம் உள்ளிட்ட பல பதக்கங்களை வென்றார்.
🌹 தன் வாழ்நாள் இறுதிவரை பல்வேறு ஆராய்ச்சிப் பணிகளில் முனைப்புடன் ஈடுபட்ட குஸ்டவ் ராபர்ட் கிர்க்காஃப் 63வது வயதில் (1887) மறைந்தார்.
இன்றைய தின நிகழ்வுகள்
1622 – இயேசு சபை நிறுவனர்கள் லொயோலா இஞ்ஞாசி, பிரான்சிஸ் சவேரியார் ஆகியோருக்கு கத்தோலிக்க திருச்சபை புனிதர்களாக அறிவித்தது.
1870 – இலங்கையில் இருந்து முதல் தடவையாக ஐரோப்பாவிற்கு கோப்பி ஏற்றுமதி சூயசு கால்வாய் வழியே மேற்கொள்ளப்பட்டது.[1]
1879 – நூற்றுக்கும் அதிகமான ஆங்கிலப் படைகள் சூலுக்களினால் சுற்றிவளைக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர்.
1894 – முதற் தடவையாக கொக்கா-கோலா மென்பானம் கண்ணாடிப் புட்டியில் அடைக்கப்பட்டு விற்பனைக்கு வந்தது.
1913 – ஆத்திரேலியாவின் வருங்கால தலைநகர் அதிகாரபூர்வமாக கான்பரா எனப் பெயரிடப்பட்டது. கான்பரா அமைக்கப்படும் வரையில் 1927 வரையில் மெல்பேர்ண் தற்காலிகத் தலைநகராக இருந்தது.
1918 – 215 ஆண்டுகளாக உருசியாவின் தலைநகராக இருந்த சென் பீட்டர்ஸ்பேர்க் தலைநகர் அந்தஸ்து மாற்றப்பட்டு மாஸ்கோ தலைநகராக்கப்பட்டது.
1922 – ஆர்மீனியா, சியார்சியா, அசர்பைஜான் ஆகிய நாடுகள் திரான்சுகாக்கேசிய சோசலிச சோவியத் குடியரசு என்ற பெயரில் இணைந்தன.
1928 – கலிபோர்னியாவில் சென் பிரான்சிசு அணைக்கட்டு உடைந்ததில் 431 பேர் உயிரிழந்தனர்.
1930 – மகாத்மா காந்தி பிரித்தானிய ஆட்சியாளரின் உப்பு ஆதிக்கத்துக்கு எதிராக 200 மைல் நீள தண்டி யாத்திரையை ஆரம்பித்தார்.
1934 – எசுத்தோனியாவில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியை அடுத்து அரசியல் கட்சிகள் தடை செய்யப்பட்டன.
1938 – செருமானியப் படைகள் ஆஸ்திரியாவை ஆக்கிரமித்தன. அடுத்த நாள் இணைப்பு அறிவிக்கப்பட்டது.
1940 – பனிக்காலப் போர்: பின்லாந்து மாஸ்கோவுடன் அமைதி உடன்பாட்டிற்கு வந்தது. கரேலியாப் பகுதி முழுவதும் சோவியத் ஒன்றியம் பெற்றுக் கொண்டது. பின்லாந்துப் படைகளும் மீதமிருந்த மக்களும் உடனடியாக வெளியேறினர்.
1942 – இரண்டாம் உலகப் போர்: பசிபிக் போர்: சாவகத்தில் இடம்பெற்ற சமரில் அமெரிக்க-பிரித்தானிய-ஆத்திரேலிய கூட்டுப் படை பண்டுங் என்ற இடத்தில் சப்பானிடம் சரணடைந்தது.
1943 – கிரேக்கம் மீதான இத்தாலிய ஆக்கிரமிப்பு: இத்தாலியப் படைகள் கார்திசுத்தா நகரைக் கைவிட்டு வெளியேறின. இதே நாளில், இத்தாலியப் படைகள் சரித்சானி நகரை சூறையாடி, 360 வீடுகளை எரித்தனர், 40 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
1950 – வேல்சில் வானூர்தி ஒன்று விபத்துக்குள்ளாகியதில் 80 பேர் உயிரிழந்தனர்.
1954 – சாகித்ய அகாதெமி இந்திய அரசினால் தொடங்கப்பட்டது.
1967 – சுகார்த்தோ இந்தோனேசியாவின் அரசுத்தலைவரானார்.
1968 – மொரிசியசு பிரித்தானியாவிடம் இருந்து விடுதலை பெற்றது
1992 – மொரிசியசு பொதுநலவாய அமைப்பினுள் குடியரசானது.
1993 – அணுக்கரு ஆயுதப் பரவல் தடுப்பு ஒப்பந்தத்தில் இருந்து விலகவிருப்பதாக வட கொரியா அறிவித்தது.
1993 – மும்பையில் இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்புகளில் 300 பேர் கொல்லப்பட்டனர்.
1999 – முன்னாள் வார்சா ஒப்பந்த நாடுகள் செக் குடியரசு, அங்கேரி, போலந்து ஆகியன நேட்டோவில் இணைந்தன.
2003 – செர்பியாவின் பிரதமர் சொரான் தின்திச் பெல்கிறேட் நகரில் கொல்லப்பட்டார்.
2003 – சார்சு தொற்றுநோய் குறித்த உலகளாவிய எச்சரிக்கையை உலக சுகாதார அமைப்பு அதிகாரபூர்வமாக விடுத்தது.
2006 – தென்னாபிரிக்கா ஒரு நாள் பன்னாட்டுத் துடுப்பாட்டமொன்றில் 438/9 ஓட்டங்களைப் பெற்று ஆஸ்திரேலியாவை (434) வென்று சாதனை படைத்தது.
2007 – கலிபோர்னியாவில் ஏற்பட்ட பெரும் காட்டுத்தீயினால் 2000 ஏக்கர்களுக்கு மேற்பட்ட நிலப்பரப்பு எரிந்து நாசமடைந்தன.
2011 – சப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை அடுத்து புக்குசிமா டா இச்சி அணு உலை வெடித்தது.
2014 – நியூயார்க்கில் ஏற்பட்ட வாயு வெடிப்பில் 8 பேர் உயிரிழந்தனர், 70 பேர் காயமடைந்தனர்.
இன்றைய தின பிறப்புகள்
1685 – ஜியார்ஜ் பெர்க்லி, ஐரிய ஆயர், மெய்யியலாளர் (இ. 1753)
1824 – குசுத்தாவ் கிர்க்காஃப், உருசிய-செருமானிய இயற்பியலாளர் (இ. 1887)
1835 – சைமன் நியூகோம்பு, கனடிய-அமெரிக்க வானியலாளர், கனிதவியலாளர் (இ. 1909)
1863 – விளாதிமிர் வெர்னாத்ஸ்கி, உருசிய கனிமவியலாளர், வேதியியலாளர் (இ. 1945)
1889 – லிபியாவின் இத்ரிசு (இ. 1983)
1907 – மா. இராசமாணிக்கனார், தமிழகத் தமிழறிஞர், வரலாற்றாளர் (இ. 1967)
1907 – தோரித் கோப்லீட், அமெரிக்க வானியலாளர் (இ. 2007)
1913 – ஒய். பி. சவாண், இந்திய அரசியல்வாதி (இ. 1984)
1922 – அப்துல் ரசாக் உசேன், மலேசியாவின் இரண்டாவது பிரதமர் (இ. 1976)
1928 – எட்வர்ட் ஆல்பீ, அமெரிக்க நாடக ஆசிரியர் (இ. 2016)
1945 – விஜய் குமார் பட்டோடி, இந்தியக் கணிதவியலாளர் (இ. 1976)
1947 – மிட் ராம்னி, அமெரிக்கத் தொழிலதிபர், அரசியல்வாதி
1949 – ரோப் கோஹன், அமெரிக்க இயக்குநர்
1953 – மாதவ் குமார் நேபாள், நேபாள அரசியல்வாதி, பிரதமர்
1956 – ஜோஸ்ட் கிப்பர்ட், செருமானிய மொழியியலாளர்
1968 – ஏரன் ஏக்கார்ட்டு, அமெரிக்க நடிகர், தயாரிப்பாளர்
1983 – அதிஃப் அஸ்லம், பாக்கித்தானியப் பாடகர், நடிகர்
1984 – சிரேயா கோசல், இந்தியப் பாடகி
1994 – கிறிஸ்டினா கிரிம்மி, அமெரிக்கப் பாடகி (இ. 2016)
இன்றைய தின இறப்புகள்
417 – முதலாம் இன்னசெண்ட் (திருத்தந்தை)
604 – முதலாம் கிரகோரி (திருத்தந்தை) (பி. 540)
1853 – மத்தாயூ ஆர்ஃபிலா, எசுப்பானிய-பிரான்சிய நச்சியலாளர், வேதியியலாளர் (பி. 1787)
1914 – ஜார்ஜ் வெஸ்டிங்ஹவுஸ், அமெரிக்கப் பொறியாளர், தொழிலதிபர் (பி. 1846)
1925 – சன் யாட் சென், சீனக் குடியரசின் 1வது அரசுத்தலைவர் (பி. 1866)
1942 – வில்லியம் ஹென்றி பிராக், நோபல் பரிசு பெற்ற ஆங்கிலேய இயற்பியலாளர், வேதியியலாளர் (பி. 1862)
1960 – க்ஷிதி மோகன் சென், இந்திய வரலாற்றாளர், எழுத்தாளர் (பி. 1880)
1972 – வசீலி பெசென்கோவ், சோவியத், உருசிய வானியற்பியலாளர் (பி. 1889)
1999 – எகுடி மெனுகின், அமெரிக்க-சுவிட்சர்லாந்து வயலின் இசைக் கலைஞர் (பி. 1916)
2006 – சுந்தரிபாய், தமிழ்த் திரைப்பட நடிகை (பி. 1923)
2009 – ஓமக்குச்சி நரசிம்மன், தமிழ்த் திரைப்பட நடிகர் (பி. 1936)
2015 – டெர்ரி பிராச்செத், ஆங்கிலேய ஊடகவியலாளர், நூலாசிரியர் (பி. 1948)
2016 – இலாயிடு சேப்ளி, நோபல் பரிசு பெற்ற அமெரிக்கப் பொருளியலாளர் (பி. 1923)
இன்றைய தின சிறப்பு நாள்
மின்வெளித் தணிக்கைக்கு எதிரான உலக நாள் (எல்லைகளற்ற செய்தியாளர்கள், பன்னாட்டு மன்னிப்பு அவை ஆகியவற்றால் 2009 இல் கோரப்பட்டது)
மர நாள் (சீனா, தைவான், மாக்கடோனியக் குடியரசு)