மீட்கப்பட்ட 62 செல்போன்கள் உரியவர்களிடம் ஒப்படைப்பு
ராணிப்பேட்டை மாவட்டத்தில் காணாமல் போய் மீட்கப்பட்ட செல்போன்கள் உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடந்தது.
மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிரண் ஸ்ருதி தலைமை தாங்கி, ரூ.10 லட்சத்து 78 ஆயிரம் மதிப்பிலான 62 செல்போன்களை உரிய நபர்களிடம் வழங்கினார். மேலும் இப்பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரவணன், சைபர் கிரைம் போலீசார் ராஜ்குமார், சத்ரியன் ஆகியோரை பாராட்டினார்.
நிகழ்ச்சியில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு முத்துகருப்பன் (இணைய வழி குற்றப்பிரிவு), துணை போலீஸ் சூப்பிரண்டுகள் பிரபு (ராணிப்பேட்டை உட்கோட்டம்), கோட்டீஸ்வரன் (பெண்கள் வன்கொடுமை தடுப்பு பிரிவு), ரவிசந்திரன் (மாவட்ட குற்றப்பிரிவு) மற்றும் ராஜாசுந்தர் (மாவட்ட குற்ற ஆவணக் காப்பகம்) ஆகியோர் கலந்து கொண்டனர்.