இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி பதவியேற்ற பின்னர், இந்தியாவுக்கு முதன்முறையாக இன்று வருகை தந்து உள்ளார். அவரை டெல்லி ராஷ்டிரபதி பவனில் முறைப்படி பிரதமர் மோடி வரவேற்றார்.
இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி பேசும்போது, உலகம் முழுவதும் அனைத்து தலைவர்களாலும் அதிகம் விரும்பப்படுபவர்களில் பிரதமர் மோடியிம் ஒருவர்.
அவர் ஒரு பெரிய தலைவராக இருக்கிறார் என உண்மையில் நிரூபிக்கப்பட்டு உள்ளது. அதற்காக எனது வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன் என கூறியுள்ளார்.